மொரப்பூர் அருகே சட்ட விரோதமாக கரு பரிசோதனை செய்து வந்த நபர்களை களவுமாகப் பிடித்தார். மருத்துவ இயக்குநர் Dr சாந்தி

   மொரப்பூர் அருகே சட்ட விரோதமாக  கரு பரிசோதனை செய்து வந்த நபர்களை கையும் களவுமாகப் பிடித்தார். மருத்துவ இயக்குநர் Dr சாந்தி 



தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தைகள் கருக்கலைப்பு அதிகமாக நடைபெறுகின்றன என்று சமூக ஆர்வலர்கள் தகவல் கொடுத்துள்ள நிலையில்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களின் துணையோடு போலியாக மருத்துவம் பார்க்கும், நபர்களையும், கருக்கலைப்பில்  
ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில்  மாவட்ட மருத்துவ இயக்குநர் டாக்டர் சாந்தி MD அவர்கள் மொரப்பூர் அருகே உள்ள வகுத்தானூர் பகுதியில் சட்ட விரோதமாக செயல் பட்டு வந்த கரு பரிசோதனை நிலையத்தை சாக்கம்மாள் (52 ) என்பவரின் வீட்டில் கரு பரிசோதனை செய்து வந்த கவியரசன், (28) அய்யப்பன், (34) ஆகிய மூவரும் சேர்ந்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா ? பெண்ணா என பரிசோதனை செய்து வந்துள்ளனர். இதனால் 

சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ இயக்குநர் சாந்தி அவர்கள் அங்கே ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவை சோதித்து பார்த்துள்ளார். மருத்துவ இயக்குநர் சாந்தி அவர்கள் இருப்பதை கண்டவுடன் கதவை மூடிக் கொண்டு திறக்காமால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் வீட்டின் உரிமையாளர் சாக்கம்மாள். இதனால் மொரப்பூர் காவல் ஆய்வாளர் வான்மதி அவர்களின் துணையோடு வீட்டின் உள்ளே சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

 பரிசோதனைக்கு பயன்படுத்திய 7. லட்சம் மதிப்புள்ள ஸ்கேனிங் மிஷினையும் 38000 ரூபாய் ரொக்க பணத்தையும் கைபற்றி ஸ்கேனிங் பணியை செய்து வந்த  அய்யப்பன், கவியரசன், அதற்கு உடந்தையாக இருந்து வந்த சாக்கம்மாள் ஆகியோர்  மீது மொரப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என பார்ப்பது சட்டபடி குற்றமாகும்,  சட்டத்தை மீறி இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் ஒரு சில நபர்கள் கருக்களை

களைத்துவிடுகின்றனர். பெண் பிள்ளைகள் தான் பலசாலி பாசம் நிறைந்தவள், திறமை வாய்ந்தவள் என்று பேசும் இம்மணில் இன்னும் வயிற்றிலே பெண் குழந்தைகளின் கருவை அழித்து வரும் சம்பவம் அதிர்ச்சியைத்தான் தருகிறது.  இதனால் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே தருமபுரி மாவட்டத்தில் இருந்து வருகிறது. 

என்று மருத்துவ ஆய்வுக் குழு அறிக்கயில் தெரிய வந்துள்ளது. இதை கேள்வி பட்ட மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் உடனடியாக தருமபுரி மருத்துவ இயக்குநர் சாந்தி அவர்களிடம் மருத்துவம் சார்ந்த துறையில் நடக்கும் குற்றங்களை தடுக்க வேண்டும், அதற்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளுங்கள்,  மக்களின் உயிர்களில் விளையாடும்  நபர்களின் மீது நடவடிக்கை எடுங்கள் என்று ஆதரவு கொடுத்ததால் மட்டுமே தருமபுரி மாவட்டங்களில் மருத்துவ துறையில்  போலியாக செயல்படும் நபர்களை கண்டறிந்து  எங்கள் மருத்துவர் குழுவோடும் சமூக ஆர்வலர்களின் தகவலின் பேரில்  கடும் நடவடிக்கையில் வருகிறேன் என்றார் மருத்துவ இயக்குநர் சாந்தி.. 

மருத்துவ இயக்குநர் சாந்தி  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டாக்டர் சாந்தி அவர்கள் தருமபுரி மாவட்டம்  பாப்பிரெட்டிப்பட்டி அருகே  போலி மருத்துவரை கைது செய்து நடவடிக்கை எடுத்த சம்பவம் மக்களிடத்தில் பெருமளவில் வரவேற்பை பெற்றது. இந்த அதிரடியான நடவடிக்கை சம்பவம் வயிற்றில் கருவை சுமக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தமா என்று எதிர்பார்க்கின்றனர் தருமபுரி சமூக ஆர்வலர்கள்


Comments