திமுக தொழிற்சங்க நிர்வாகி இடையூறு செய்ததால் தர்ணாவில் ஈடுபட்ட நடத்துனருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி
திமுக தொழிற்சங்க நிர்வாகி இடையூறு செய்ததால் தர்ணாவில் ஈடுபட்ட நடத்துனருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி
தருமபுரி மண்டல போக்குவரத்து நகர கிளையில் நகர பேருந்தில் நடத்துனராக சண்முகம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். தருமபுரி மண்டல அலுவலகத்தில் போக்குவரத்து கட்டுபாட்டாளராக உள்ள திமுக தொழிற்சங்க நிர்வாகி தர்மலிங்கம் தொடர்ந்து பணி வழங்காமலும் அல்லது விடுமுறை அளிக்காமல் தொடர்ந்து அதிக அளவு பணிகளை ஒதுக்கி பணிச்சுமையையும் ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடம் மட்டும் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு டார்சல் செய்து வந்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று நடத்துனர் சண்முகம் வழக்கம் போல் பணிக்கு சென்ற நிலையில் ஏற்கனேவே எந்த பேருந்திற்க்கு செல்ல வேண்டும் என கையெழுத்திட்டு வந்திருந்த நிலையில் எப்போதும் போல வேறு வழி தடத்தில் இயங்கும் பேருந்திற்க்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து இதேபோல் வெவ்வேறு வழித்தடங்களுக்கு அடிக்கடி மாற்றப்படுவதாலும் அதிகளவு தொடர் பணிகளையும் கட்டுபாட்டாளராக பணிபுரியும் திமுக தொழிற்சங்க நிர்வாகி தர்மலிங்கம் ஈடுபட்டு வந்ததால் நடத்துனர் சண்முகம் மனமுடைந்து தருமபுரி மண்டல கிளை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது மன உளைச்சலில் இருந்தவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment