கட்டுமான பணியாளர்களாக மாறி வரும் பொ. மல்லபுரம் தூய்மை பணியாளர்கள் - மீண்டும் தருமபுரியில் சர்ச்சை

தர்மபுரியில் தொடரும் சர்ச்சை

 தூய்மை பணியாளர்கள் கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் போரூராட்சி நிர்வாகம்

 சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு 


மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது


 தர்மபுரி மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் கொத்தடிமைகள் போலவும்
 மனிதாபிமானமற்ற முறையில் மிகவும் கீழ்த்தரமாகவும்


 சக மனிதனை மதிக்காமலும் தூய்மை பணியாளர்களை நடத்தும் அவலங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது

 சமீபத்தில் கூட மாரண்டஹள்ளி பேரூராட்சியில்
 மனித கழிவை தூய்மை பணியாளர்கள் அகற்றிய வீடியோ வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது

 இந்த செயல் பல்வேறு தரப்பினரால் கடும் கண்டனத்துக்கு உள்ளானது 


இந்த சூடு ஆறுவதற்குள் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ. மல்லாபுரம் பேரூராட்சியில் 40க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை தூய்மை பணிக்கு பயன்படுத்தாமல் லாரிகள் மூலம் செங்கற்களை ஏற்றி வந்து பேருந்து நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லாத பகுதிகளுக்கு செங்கல் சுவர் ஐந்து அடி உயரத்திற்கு 30 அடி நீளத்திற்கு கட்டுமான பணிக்கு பயன்படுத்தியுள்ளனர்


 செங்கல் எடுத்து அடுக்குவது, கலவை கலக்கி கொடுப்பது . எம்சாண்ட் அள்ளி கொட்டுவது போன்ற பணிகளுக்கு பேரூராட்சி உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களை அழைத்து வந்து கொத்தனார் மேஸ்திரி கலவை கலக்கும் சித்தாள் போல வேலை வாங்கியது அப்பகுதியில் சென்ற பொது மக்களையும் சமூக ஆர்வலர்களையும் ஆச்சரியப்படுத்தியது 


ஒரு கட்டுமான பணி நடைபெறுவதற்கு முறையாக ஒப்புதல் பெற்று ஒரு இன்ஜினியர் மூலமாகவோ? மேஸ்திரி மூலமாக டெண்டர் விட்டு அவர்கள் மூலமாக வேலையை செய்ய வைக்கலாம்


 தூய்மை பணியாளர்களை தனது இஷ்டத்திற்கு அனைத்து வேலைகளுக்கும் விதிகளை மீறி பயன்படுத்துவது பெரும் கண்டனத்துக்குரிய செயலாகவே தெரிகிறது


 தூய்மை பணியாளர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக காலை 5 மணிக்கு எழுந்து ஊர் முழுவதையும் தூய்மைப்படுத்துவதில் எடுக்கும் சிரமத்தை விட


 பேரூராட்சி நிர்வாகம் தனது வேலையை எடுத்து விடுவார்களோ? என்று பயந்து அவர்கள் சொல்லும் செயலுக்கு எல்லாம் தலையாட்டி பொம்மை போல பயந்து ஒடுங்கி வேலை செய்வதும்


 இல்லை என்றால் அவர்களை தூக்கி எறிவதும் அன்றாட செயலாக தர்மபுரி மாவட்டத்தில் நடந்து வருகிறது

Comments