அரூர் மின்வாரியத்தால் குருடான அரூர் நேதாஜி நகர் நடவடிக்கை எடுப்பாரா இ இ பூங்கொடி?

அரூர் மின்வாரியத்தால் குருடான அரூர் நேதாஜி நகர் நடவடிக்கை எடுப்பாரா இ இ பூங்கொடி? 

அரூர்
தருமபுரி மற்றும் அரூர் சாலை தற்போது சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் அரூர் வட்டம் மோப்பிரிப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட  நேதாஜி நகர் சாலை ஓரத்தில் அமைந்துள்ள மின்சார கம்பத்தை வைத்தே நெடுஞ்சாலை வாய்க்கால் அமைத்தது சமூக ஊடகங்களில் பெரும் கேலிகூத்திற்கு உள்ளானது. அப்போது அந்த மின்சார கம்பத்தை அகற்றிய மின்சாரத்துறையினர் நேதாஜி நகரில் உள்ள உயர் கம்ப மின்விளக்கின் மின்சார இணைப்பை துண்டித்துவிட்டனர். இதனால் அப்பகுதியின் அருகே உள்ள மொருப்பூர் வனச்சரக பகுதியில் இருந்து காட்டு பன்றிகள், பாம்புகள், வருவதாகவும், அவ்வபோது திருட்டு சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்களின் நலனுக்காக பணியாற்றும் மின்சார துறையினர் .மக்களை இருட்டில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று நேதாஜி நகர் குடியிருப்பு வாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். மின்விளக்கு இல்லாமல் இருட்டில் நடக்கும் மக்களுக்கு விளக்கேற்றி வைப்பாரா இ இ பூங்கொடி அவர்கள் !!!!

Comments