தருமபுரி மாவட்டம் அரூரில் இன்று அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள், இரண்டு திரையரங்குகளில் ஔிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
நள்ளிரவு மூன்று மணி அளவில் இருந்து காத்திருந்த ரசிகர் கூட்டம் இரண்டு திரையரங்குகளின் முன்பு அலைமோதிய நிலையில் விடியற்காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். துணிவு திரைப்படம் 6:30 மணி அளவில் வெளியிடப்பட்டது. ஆனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெியிடும் திரையரங்கில் நிர்வாகத்திற்கும் ரசிகர் மன்றத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி வெளியிடப்படுவதாக தெரிவித்து பின்பு 07:20 மணிக்கு இந்த படம் ஒளிபரப்பானது. வெகு நேரம் காத்திருந்த ரசிகர்கள், டிக்கெட் வாங்குவதற்காக அலைமோதி முந்தியடித்து கொண்டனர்.
அப்போது வாரிசு திரைப்படம் வெளியிட காலதாமதம் ஆனதால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து நுழைவாயிலில் இருந்த இரும்பு தடுப்பை உடைக்க முயன்றனர். காவல் துறையினரின் சுமூக பேச்சுவார்த்தையால் திரைப்படம் ஔிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
வெகுநேரம் காத்திருந்த ரசிகர்களின் கொந்தளிப்பால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment