இலக்கியம்பட்டி ஆசிரியர் பணியிடம் மாற்றம் - மறைமுகமாக வேலை செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் நடவடிக்கை எப்போது தமிழகமே ! பள்ளியில் நுழைந்த சாதி அரசியல்

கடந்த ஒரு  மாதத்திற்கு முன்பு தருமபுரி இலக்கியம்பட்டி  அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சித்ரா ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்ததாகவும் அண்ணாமலையிடம் பேசியதகாவும் வருங்கால இளைஞர்கள்  பாரதத்தை காப்பாற்ற நமது பாராதிய ஜனதா கட்சியில் சேருங்கள் என்று பள்ளி நேரத்தில் அரசியல் பணிகளுக்கு  பேசிய  அவருடைய செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.

இது தருமபுரி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றும் பல்வேறு கட்சி அமைப்புகள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்த பிறகு தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் அவர்கள் செல்போன் உரையாடல் குறித்து ஆசிரியர் சித்ராவிடம் விளக்கம் கேட்டு 17A நோட்டிஸ் அனுப்பினார்.

 அதில் ஏற்றுக்கொள்ளகூடாத  வகையில் முன்னுக்கு முரணான பதில்கள் இருந்த நிலையில் ஆசிரியர் சித்ரா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இது வரை  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மெத்தனபோக்கில்  இருந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடத்திலும் நடக்கும் சாதி மத அரசியலில் ஈடுபடும் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தருமபுரி சமூக ஆர்வலர் மற்றும் செய்தியாளர் எம் எஸ் பி மணிபாரதி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க நந்தகுமார் இ ஆ ப அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து அறிக்கை ஒன்ற மனுக்களாக கொடுத்த பிறகு தற்போது ஆசிரியர் சித்ரா அவர்கள் தருமபுரி அதகபாடி பகுதிக்கு  பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

ஆனால் ஆசிரியர்  சித்ரா அவர்கள் மருத்துவ ரீதியாக விடுமுறை போட்டுள்ளார் , ஆகவே அவருக்கு தெரியாது  இதனால் பணியிடம் ஆணைக்கடிதம் அவரிடம் செல்லவில்லை என  ஒரு கட்டுகதையை மாவட்ட கல்வி நிர்வாகம் அவிழ்த்துவிட்டது. ஆசிரியர் சித்ரா பள்ளி வேலை நேரத்தில் இருக்கும்போதுதான் தலைமையாசிரியர் வழியாக பணியிடம் மாற்றத்திற்கான ஆணைக்கடிதம் கொடுக்கப்பட்டது.  

இதுவரையில் ஆசிரியர் சித்ரா அவர்கள் அதகபாடி பகுதிக்கு போகாமல் இலக்கியம்பட்டி பள்ளிக்கு வந்துசெல்வதாக கூறபடுகிறது. இதுகுறித்து இதுவரையில் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது தருமபுரியில் உள்ள ஒரு சில அரசியல் வாதிகளின் அழுத்தத்தால் பணியிடம் மாறுதல் ஆணை தடை செய்து தற்போது இலக்கியம்பட்டி பள்ளிகூடத்தில் பணி செய்ய அனுமதிகொடுத்துள்ளார். 

மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன்.  இப்படி மாவட்ட கல்வி அலுவலர் செய்த சம்பவம்  மதுபானக்கடையில் வாங்கும் ஒரு குவாட்டறுக்கு 5 ரூபாய் இலஞ்சம் வாங்குவது போல ஒருவேளை இவர்களும் அப்படியோ என்ற சந்தேகம் எழுவதாக தருமபுரி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 


Comments