தருமபுரி பொய்யப்பட்டி அருகே பேருந்து வசதியின்றி இருட்டில் நடந்து செல்லும் பள்ளி மாணவிகளின் திகிலூட்டும் சம்பவம் விடியல் ஆட்சியில் தருமபுரியில் இருட்டில் பள்ளி மாணவிகளின் கல்வி பயணம்
தருமபுரி பொய்யப்பட்டி அருகே பேருந்து வசதியின்றி இருட்டில் நடந்து செல்லும் பள்ளி மாணவிகளின் திகிலூட்டும் சம்பவம்
விடியல் ஆட்சியில் தருமபுரியில் இருட்டில் பள்ளி மாணவிகளின் கல்வி பயணம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சட்டையம்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 13 மேற்பட்ட பள்ளி மாணவிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை அரசு பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த சட்டையம்பட்டி கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து ஒன்று கொரோனா காலகட்டத்திற்கு பின்பு இயக்கப்படவில்லை. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் சுமார் இரண்டரை கிலோமீட்டர் தொலைதூரம் நடந்து சென்று கல்வியை கற்கும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது, இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 3 கிலோமீட்டர் நடக்கும் பள்ளிமாணவிகள் அருகில் உள்ள காட்டு மிருகங்களால் பெரும் அச்சத்தோடும் இரவில் சாலைக்கும் சாலைக்கும் கடக்கும் பாம்புகள், திடீரென்று ஊளையிடும் தொலைதூர நாய் சத்தமும் பேரிடி போல் கேட்கும்போது பயந்து ஓடி கீழே விழுந்தது அந்த கிராமத்தில் வேதனையை உருவாக்கியது.
தனியார் பேருந்தில் சுமார் 17 கி.மீட்டர் தூரம் ஊத்தங்கரை வரை பயணம் செய்து, அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்து பள்ளியை சென்றடைகின்றனர், குறிப்பாக 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், தினம்தோறும் சுமார் 8 கிலோமீட்டர்க்கு மேல் நடந்து செல்லும் ஒரு அவல நிலை ஏற்பட்டு வருகிறது. பள்ளியை முடித்துவிட்டு வீடு சேர்வதற்கு இரவு எட்டு மணி ஆகுவதாகவும் இரவு நேரத்தில் நடந்து செல்லும் சாலையில் விளக்குகள் கூட இல்லை என மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஒரு சில நேங்களில் பள்ளி மாணவிகளுக்கு அப்பகுதில் இருந்து கடந்து செல்லும் இருசக்கர வாகனத்தில் வரும் சமூக விரோதிகள் மாணவிகளை கேலி செய்கிறார்கள் என புகார்கள் எழுந்தன. இதனை அறிந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இருந்த அரூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் Dsp பெனாசிர் பாத்திமா அவர்கள் மாணவிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமரா வைத்துள்ளார்.
இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. எத்தனையோ முறை சட்டையம்பட்டி கிராமத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், போக்குவரத்து துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என்பது ஒரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேலை தருமபுியில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை வருடம் கடந்த பின்பு பட்டானிகல்லைக்கும், பேரீச்சை பழத்திற்கும் போடுவார்களோ என்ற சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தின் விடியல் ஆட்சியில் தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளின் பள்ளி பயணம் ஒரு இருட்டில்தான் என்று அப்பகுதி மக்களிடையே ஒரு புலம்பலாக உள்ளது. மேலும் பள்ளிக்கு சென்று வர தினம்தோறும் 30 ரூபாய் கட்டணம் செலுத்தி தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்டு வருவதாகவும் எனவே பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் பயன் பெறும் வகையில் அரசு பேருந்து ஒன்று தங்கள் கிராமத்திற்கு இயக்க வேண்டும் என அரசு பள்ளி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தருமபுரி பொய்யப்பட்டி அருகே பேருந்து வசதியின்றி இருட்டில் நடந்து செல்லும் பள்ளி மாணவிகளின் திகிலூட்டும் சம்பவம்
விடியல் ஆட்சியில் தருமபுரியில் இருட்டில் பள்ளி மாணவிகளின் கல்வி பயணம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சட்டையம்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 13 மேற்பட்ட பள்ளி மாணவிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை அரசு பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த சட்டையம்பட்டி கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து ஒன்று கொரோனா காலகட்டத்திற்கு பின்பு இயக்கப்படவில்லை. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் சுமார் இரண்டரை கிலோமீட்டர் தொலைதூரம் நடந்து சென்று கல்வியை கற்கும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது, இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 3 கிலோமீட்டர் நடக்கும் பள்ளிமாணவிகள் அருகில் உள்ள காட்டு மிருகங்களால் பெரும் அச்சத்தோடும் இரவில் சாலைக்கும் சாலைக்கும் கடக்கும் பாம்புகள், திடீரென்று ஊளையிடும் தொலைதூர நாய் சத்தமும் பேரிடி போல் கேட்கும்போது பயந்து ஓடி கீழே விழுந்தது அந்த கிராமத்தில் வேதனையை உருவாக்கியது.
தனியார் பேருந்தில் சுமார் 17 கி.மீட்டர் தூரம் ஊத்தங்கரை வரை பயணம் செய்து, அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்து பள்ளியை சென்றடைகின்றனர், குறிப்பாக 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், தினம்தோறும் சுமார் 8 கிலோமீட்டர்க்கு மேல் நடந்து செல்லும் ஒரு அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
பள்ளியை முடித்துவிட்டு வீடு சேர்வதற்கு இரவு எட்டு மணி ஆகுவதாகவும் இரவு நேரத்தில் நடந்து செல்லும் சாலையில் விளக்குகள் கூட இல்லை என மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரு சில நேங்களில் பள்ளி மாணவிகளுக்கு அப்பகுதில் இருந்து கடந்து செல்லும் இருசக்கர வாகனத்தில் வரும் சமூக விரோதிகள் மாணவிகளை கேலி செய்கிறார்கள் என புகார்கள் எழுந்தன.
இதனை அறிந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இருந்த அரூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் D s p பெனாசிர் பாத்திமா அவர்கள் மாணவிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமரா வைத்துள்ளார்.
இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. எத்தனையோ முறை சட்டயம்பட்டி கிராமத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், போக்குவரத்து துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என்பது ஒரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வேலை தருமபுியில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை வருடம் கடந்த பின்பு பட்டானிகல்லைக்கும், பேரீச்சை பழத்திற்கும் போடுவார்களோ என்ற சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தின் விடியல் ஆட்சியில் தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளின் பள்ளி பயணம் ஒரு இருட்டில்தான் என்று அப்பகுதி மக்களிடையே ஒரு புலம்பலாக உள்ளது.
மேலும் பள்ளிக்கு சென்று வர தினம்தோறும் 30 ரூபாய் கட்டணம் செலுத்தி தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்டு வருவதாகவும் எனவே பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் பயன் பெறும் வகையில் அரசு பேருந்து ஒன்று தங்கள் கிராமத்திற்கு இயக்க வேண்டும் என அரசு பள்ளி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.a
Comments
Post a Comment