தருமபுரி மாவட்டம் ,பாப்பிரெட்டிப்பட்டி பி.எஸ்.சரவணன் தலைமையில் பி.பள்ளிப்பட்டி கிராமத்தில் திமுக சார்பில் சம‌த்துவ சமூக நல்லிணக்க கிறிஸ்மஸ் பெரு விழா

,
தருமபுரி மாவட்டம் ,பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பி.பள்ளிப்பட்டி கிராமத்தில் திமுக சார்பில் சம‌த்துவ சமூக நல்லிணக்க கிறிஸ்மஸ் பெரு விழா கேக்வெட்டி ஏழை எளிய கிருஸ்தவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் திருமலாதினேஷ்,கிளைகழக செயலாளர்கள் ஜனா(எ)ஜான்,ராஜேந்திரன்,ஸ்டாலின் மணிகுமார், அந்தோணி,மாதையன்,பொண்மணி,மரியம்சூசை,விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்  பி.பழனியப்பன் அவர்கள் கிருஸ்தவ மக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து கேக் வெட்டியும்,சுமார் 100 ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி,சேலைகள் நலத்திட்ட வழங்கினார்.


 

Comments