அரூரில் தெரு நாய்களை விசம் வைத்து கொன்ற மனித மிருகங்கள் யார்? கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்

தருமபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகரில் உள்ள 15வது வார்டில் மர்மமான முறையில் 5க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகரில் உள்ள 15 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் பேருந்து நிலையத்திலிருந்து அம்பேத்கர் நகர்  வழியாக பொய்யப்பட்டி, தீர்த்தமலை, முத்தானூர், கோட்டப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இந்த சாலை வழியாக பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலும் நடந்தும் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பொழுது மக்களை அச்சுறுத்தும் விதமாக தெரு நாய்கள் செயல்படுவதால் மக்கள் அச்சத்துடன் செல்லும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகமானது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் மர்மமான முறையில் 5க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் நள்ளிரவு நேரத்தில் உயிரிழந்துள்ளன. மேலும் ஒரு சில நாய்கள் உயிருக்கு போராடி வருகின்றன.

Comments