அரூர் அரசு மருத்துவமனை அருகே சாலை ஓர ஜவுளி கடையில் கஞ்சா விற்பனை - இருவரிடமிருந்து சுமார் 40,000 மதிப்புள்ள கஞ்சா 3.O ஆக்சனில் இறங்கிய அரூர் காவல் துறை

அரூர் அரசு மருத்துவமனை அருகே சாலை ஓர ஜவுளி கடையில் கஞ்சா விற்பனை - இருவரிடமிருந்து சுமார் 40,000 மதிப்புள்ள கஞ்சா 3.O ஆக்சனில் இறங்கிய அரூர் காவல் துறை 
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில்
ஆபரேஷன் கஞ்சா வேட்ட
3.0 வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு ஆணைக்கிணங்க  தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் அரூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி தனிப்படை பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது  தீர்த்தமலை அடுத்த பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர் ஜவுளி கடை நடத்தி வருவதாகவும், இவரிடம் சிவகுமார் என்பவர் வேலை செய்து வருவதாகவும், இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்வதாக உறுதியான தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட காவல்துறையினர் கடையில் சோதனை செய்தபோது சிவகுமார் தப்பி ஓட முயன்றார் இவரைப் பிடிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது மறைத்து வைத்திருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய பிரியாவை பெரியார் நகரில் அவர் வசித்து வரும் வீட்டில் கஞ்சாவுடன் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர். இருவரிடமிருந்து சுமார் ரூபாய் 40,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

Comments