63வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர்கள்!
63வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர்கள்!
ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் நடந்த 63வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் பங்கேற்ற தஞ்சாவூர் ஸ்கேட்டிங் அசோசியேஷனைச் சேர்ந்த வீரர்கள் ஜூனியர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். ஜூனியர் பிரிவு விளையாட்டு வீரர்கள் விவசாய கல்லூரி மாணவர் விஸ்வரூபன், பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஜீவேஷ், அகிலேஷ், பள்ளி மாணவர்கள் யோகன்சரன், சஞ்சய் பிரியன் க்ரிஷிகேஷ் நிசாந்த் முத்தாசிம் உட்பட 11 தஞ்சை விளையாட்டு வீரர்கள். பெண்கள் சீனியர் பிரிவில் பூர்ணிஷா மற்றும் ட்ரிப்பினா வெண்கலப் பதக்கம் வென்றனர்.வெற்றி பெற்ற வீரர்களும் பயிற்சியாளர்களும் (ராஜீ மாஸ்டர் ஜோஸ் மாஸ்டர், அரவிந்த் மாஸ்டர்) நாளை டிசம்பர் 16 அன்று காலை தஞ்சை ஸ்கேட்டிங் மைதானத்திற்கு வருகை தருகின்றனர். இவர்களை தஞ்சாவூர் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் நிர்வாகிகள் பெற்றோர்கள் வரவேற்கின்றனர்.
நிருபர் அ, மகேஷ்
Comments
Post a Comment