மீண்டும் பாப்பிரெட்டிப்பட்டி பத்திர பதிவு பணியில் 1 இலட்சம் மோசடி கண்ணீர் விடும் குடும்பம் ! பாமர மக்களுக்கு விடியலை கொடுப்பாரா முதல்வர் ?



தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பத்திரப்பதிவுத்துறை  முக்கிய பங்கு வகிக்கிறது. பத்திர பதிவு அலுவகத்திற்கு தினந்தோறும் சுமார் 15 க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களுடைய நிலங்களை பதிவு செய்ய வருகை தருகின்றனர்.



இது போன்ற பணிகளுக்கு வரும் பொதுமக்களிடம் பத்திர பதிவு செய்ய குறிப்பிட்ட தொகை ஆகும் என பத்திரப்பதிவு அலுவலகத்தில் அருகில் உள்ள ஒரு சில பத்திர எழுத்தாளர்கள் லட்சக்கணக்கில் மோசடி செய்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்க்கரை ஆலை அருகே உள்ள  அம்மாபாளையத்தில்
வசிக்கும் பட்டு (வயது 46) என்பவர் கணவர் இல்லை மற்றும் மகன் சரத்குமார் (வயது 26) இருவரும் தங்களுடைய நிலத்திற்கான பத்திர பதிவு செய்ய சந்திரன் வயது 34 அவர்களிடம் அணுகியுள்ளனர். பத்திர எழுத்தர்  சந்திரன் என்பவர் பத்திர பதிவு செய்யும் பணிக்காக  சுமார் ஒரு இலட்சம் வாங்கியுள்ளார்.

ஆனால் 5 மாதகாலமாக அந்த பத்திரப்பதிவுக்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை என்பதை அறிந்த பட்டு மற்றும் மகன் சரத்குமார் தனது சொந்த முயற்சியில் டி ஆர் ஓ அவர்களின் மூலமாக தங்களது நிலத்திற்கான பத்திர பதிவை செய்து முடித்துவிட்டோம் என்று கூறுகின்றனர். தற்போது பத்திர எழுத்தர் சந்திரன் என்பவரிடம் கொடுத்த ஒரு இலட்சத்தை கேட்டால் எங்கள் மீது காவல்துறை அதிகாரிகளை வைத்து நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகிறார். நாங்கள் கொடுத்த பணத்தை கேட்டால் காவல் துறையினர் பெயரை சொல்லி மிரட்டுகிறார். 



பத்திர எழுத்தர் சந்திரன் மூலமாக எங்களுக்கு எந்த பணிகளும் நடக்கவில்லை, அதன் மீது சந்தேகம் வந்ததால் கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டோம் இதனால் எங்களை சந்திரன் ஆபாசமாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றார். இந்த சம்பவம் குறித்து பத்திர எழுத்தர் சந்திரனிடம் கேட்டபோது அவர்கள் கொடுத்த பணத்திற்கு எப்படி இப்போது கணக்கு சொல்லமுடியும் ? அதை நான் பார்த்துக்கொள்கிறேன் பேசாம ஆளுக்கு 2000 ரூபாய் தருகிறேன் பேசாம வாங்கி செல்லுங்கள் என்று தெனாவெட்டாக பேசினார். பிறகு அவர்கள் பணமே கொடுக்கவில்லை, நானும் வாங்கவில்லை, என்றார். பணம் வாங்கவில்லை என்று சொல்லும் சந்திரன் எதற்காக ஆளுக்கு 2000 ஆயிரம் வாங்கிசெல்லுங்கள்  என்று சொல்லவேண்டும் ? என்ற சந்தேகம் எழுகிறது.  இது பற்றி பாப்பிரெட்டிப்பட்டி பத்திர பதிவு அலுவலர் இந்திரா அவர்களிடம் கருத்து கேட்டபோது இது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. 
வெளியில் நடக்கும் சம்பவத்திற்கும் 
எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட்டார். பத்திர பதிவு பணிகளில் புரோக்கர் மூலமாக நடக்கும் பணமோசடியால் பொதுமக்கள் ஏராளமானோர் பாதிக்கபட்டு வருகின்றனர். இதனால் தருமபுரி ரெஜிஸ்டர் அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இது போன்ற பணமோசடிகளில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Comments