கடத்துாரில் நடந்த இளைஞர் திறன் வளர்ப்பு திருவிழாவில் 116 பேருக்கு பயிற்சி ஆணை ஆட்சியர் சாந்தி வழங்கினார்

கடத்துாரில் நடந்த இளைஞர் திறன் வளர்ப்பு திருவிழாவில்
 116 பேருக்கு பயிற்சி ஆணை ஆட்சியர் சாந்தி வழங்கினார்

கடத்தூர் நவ 6

தருமபுாி மாவட்டம் கடத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பொருட்டு மாவட்ட மகளிர் திட்டம் சார்பில்  இளைஞர் திறன் மேம்பாட்டு திருவிழர நேற்று கடத்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது.   
 இதில் ஒடசல்பட்டி சில்லாரஅள்ளி, புதுரெட்டியூர், தாளநத்தம். அய்யம்பட்டி, உள்ளிட்ட  ஒன்றியத்திற்க்குட்பட்ட 370 இளைஞர்கள், பெண்கள் பங்கேற்ற இந்த நிகழ்வின் போது. 14 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று  116 பேர்களை பயிற்சிக்காக தேர்வு செய்தனர். அவர்களுக்கு.3 முதல் 6 மாதம் வரைபயிற்சியும் அதில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு  மற்றும் வங்கி கடன் பெறுவும் வழிவகை செய்யும்  பொருட்டும் இத்திருவிழா நடந்தது.. தருமபுாி  மாவட்ட ஆட்சியர் சாந்தி  இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு பயிற்சி ஆணைகளை வழங்கி உரையாற்றினார்.

Comments