போதை பொருள் ஒழிப்பு என்ற பெயரில் நாடகம் நடத்தி "போதைப்பொருள் விற்பவனிடம் லஞ்சம் வாங்கி" சமூகத்தை சீரழிக்கும் அரூர், தருமபுரி காவல்துறை !!! முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் டி ஜி பி சைலேந்திரபாபு சார் எச்சரிக்கையாக இருங்கள் எச்சரிக்கும் விடுதலை சிறுத்தைகள்
தமிழகத்தில் டிஜிபி உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வுகளை காவல்துறை செய்ய வேண்டும் மற்றும் தன்னார்வலர்கள் மக்களிடையே பரப்புரை சாற்ற வேண்டும் போதைப் பொருள்கள் விற்பவரின் சொத்துக்களை முடக்க வேண்டும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதேபோல பல்வேறு மாவட்டங்களில் போதை பொருட்களுக்கு எதிராகவும் போதை பொருள் தடுப்பதற்காக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், காவல்துறையினர் விழிப்புணர்வு நடத்தி வந்தனர். ஆனால் இது ஒரு சில பகுதிகளில் காவல்துறை நாடகமாகத்தான் செயல்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு ஆதாரப்பூர்வமாக தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள காவல்துறையை சேரும் என்பது அதிகாரபூர்வமாக அரூர் பகுதி விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அரூர் பகுதிகளில் சுமார் 13 வருடங்களாக லாட்டரி, கஞ்சா, குட்கா , புகையிலை , போன்ற தொழில்களில் மறைமுகமாக சுமார் 90 பேர்கள் ஈடுபட்டு வருகின்றனர், என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு டிஸ்டிபுட்டராக மகேந்திரன் என்பவர் உள்ளார். இவருக்கு இன்னொரு பெயர் போஸ்ட் கவர் மகேந்திரனாம் அதாவது போஸ்ட் கவர்லதான் லஞ்சம் கொடுப்பாராம் அதனால இவருக்கு போஸ்ட் கவர் மகேந்திரன் என்று பெயர் பரவியதாக கூறப்படுகிறது. மகேந்திரனின் பணிகள் என்னவென்றால் கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தர்மபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, சேலம் வடக்கு மாவட்டம், போன்ற காவல்நிலையங்களுக்கு சென்று மாதம் மாதம் ஒவ்வொரு காவல்நிலையத்திற்கும் சுமார் 10000 ஆயிரம் லஞ்சம் கொடுத்து வருவதாக காவல்துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இதனை எவிடன்ஸ் பார்வை குழுவும் ஒரு இடத்தில் மட்டும் பின் தொடர்ந்து உறுதி செய்துள்ளது. இவர்கள் ஒரு குழுவாக பிரிந்து ஆதிதிராவிடர் சமூகம், அருந்ததியர் சமூகம் , போயர் சமூகம், வன்னியர் சமூகம், என்று ஒரு அட்டவணை போட்டு யார் வேலையில்லாத இளைஞர்களை,யும் அப்பாவி மாணவர்களையும், நோட்டமிட்டு அவர்களுக்கு அதிக பணம் வரும் வேலை இதுதான் என்று ஆசை வார்த்தை கூறி அவர்களையும் கஞ்சா பழக்கதிற்கு ஈடுபடுத்தி லாட்டரி, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கொலை, கற்பழிப்பு, உயிரிழப்பு, சமூகபிரச்சனை, உருவாகிறது அதை தாண்டி கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும், மிகபெரியளவில் பாதிக்கப்டுகின்றனர். இதனை தடுக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் காவல்துறை தரப்பில் பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் பழக்கத்தால் உருவாகும் ஆபத்து மற்றும் அதனை ஒழிப்பதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். ஒரு பக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இன்னொருபக்கம் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனைக்கு ஆதரவாக மாதம் மாதம் லஞ்சம் வாங்கினால் இதுதான் வருங்கால இளைய சமூதாயத்தை பாதுகாப்பதா ? ஆனால் ஒன்று கஞ்சா, போதை பொருள் விற்பனை செய்பவனால் இந்த சமூகம் அழியபோவதில்லை இதெல்லாம் தவறு என்று தெரிந்து விற்பவனிடமே லஞ்சம் வாங்குகிறதே அந்த காவல்துறையால் மட்டும்தான் இந்த சமூகத்திற்கு ஆபத்து ! அதாவது தவறுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறையால் மட்டும் எல்லோரையும் சொல்லவில்லை கவனத்தில்ம் கொள்ளவேண்டும் என விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் குற்றம் சாட்டி வருகின்றனர். மற்றும் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பது, கஞ்சா, குட்கா, போன்ற போதைபோருள்கள் மற்றும் லாட்டரி, போன்ற சமூதாயத்தை கெடுக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது ஒரு சில நேர்மையான காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முயன்றால் அவர்களை உயர் காவல்துறை அதிகாரிகள் மிரட்டுவதாக காவல்துறை வட்டாரத்தில் புலம்புகின்றனறாம், இந்த போதை பொருள் ஆதிக்கம் முழுவதும் தலித் மக்களையும் பட்டியிலன மக்களையும் குறி வைத்து அவர்களுடைய வாழ்கையை சீரழித்து வருகின்றனர். மாணவர்களிடையே விழிப்புணர்வு என்ற பெயரில் ஒரு சில காவல்துறை நாடகம் நடத்துகிறது. உடனடியாக DGP சைலேந்திர பாபு அவர்கள் இந்த தருமபுரி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி தவறுக்கு துணைபோகும் காவல்துறை மீதும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் கோரிக்கைவைத்துள்ளனர். ஒரு பக்கம் அரூர் பகுதி மக்களிடையே இந்த திமுக ஆட்சி வந்தாலே இப்படித்தான் இருக்கும் என்ற பிம்பம் உருவாகிவிட்டது. காரணம் இந்த கும்பல் போகும் இடத்திலெல்லாம் எனக்கு மாவட்ட செயலாளரை தெரியும், எம்.பி யை தெரியும் , அமைச்சரை தெரியும் என்று திமுகவின் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை சொல்லிக்கொண்டு இந்த அரூர் பகுதிவாழ் மக்களின் சமூகத்தை சீரழிக்கிறது இதனால் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளும் செயலிழக்கும்,, என்பதை தமிழக முதல்வரும் , டிஜிபி சைலேந்திரபாபு அவர்களும் கவனமாக இருங்கள் இங்கே எல்லாம் சரியாக இருப்பதாக பொய்யான தகவல்களை காவல்துறை கொடுத்து வருகிறார்களோ என்னவோ ? அதுமட்டுமின்றி போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களை தெரிந்தும் தெரியாமல் இங்கே இருக்கும் திமுக பொறுப்பாளர்களும் கவனாமாக இருக்கவேண்டும் காரணம் இதனை வைத்து சன்பரிவார் கும்பல் தவறான பாதையில் செல்லும் இளைய சமுதாயத்தை தன் பக்கமாக இளுப்பதற்காக களம் இறங்கிகொண்டிருப்பதை கவனமாக உணர்ந்து தமிழக முதல்வரின் ஆட்சிக்கு உறுதுணையாகவும் கவனமாகவும் இருக்கவும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment