விபத்தை ஏற்படுத்தும் வைகையில் விளம்பர பேனர் - அச்சத்தில் வாகன ஓட்டிகள் - கண்டுகொள்ளாத அ. பள்ளிபட்டி காவல்துறை !
சேலம் மற்றும் அரூர் முக்கிய சாலை பகுதியான அ. பள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பட்டி, சர்க்கரைஆலை தருமபுரி பகுதியில் இருந்து வரும் மக்களுக்கு முக்கிய சாலை பகுதி ஆகும். அப்பகுதியில் இருந்து வரும் மக்கள் சேலம் சாலையில் இருந்து வாகனம் யேதாவது வருகிறதா என்று பார்க்கும் போது சாலையின் நடுவே வைக்கபட்ட விளம்பர பேனர் மறைக்கும் வகையில் உள்ளது. தலைக்கவசம் அனையவில்லை என்றால் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று விளம்பரம் செய்யும் காவல்துறைக்கு, இதுபோன்று சாலைகளில் வைக்குபடும் விளம்பர பேனர்களால் கூட விபத்து ஏற்ப்படும் என்பது ஏன் புரியவில்லை என்று அ. பள்ளிப்பட்டி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பேனர் வைக்கபட்ட அருகில் காவல்நிலையம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment