ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை மேய்வதைப்போல " ஆளுநர் என்கிற கவர்னர் " பாப்பிரெட்டிபட்டியில் நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு !

ஒண்ட வந்த ஊர் பிடாரியை மேய்வதைப்போல " ஆளுநர் என்கிற கவர்னர் " பாப்பிரெட்டிபட்டியில் நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு  !



தர்மபுரி

தமிழகத்தில் திமுக இளைஞரணி சார்பில் பல்வேறு இடங்களில் 29-30-31, நாள் வரை  திராவிடமாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து 29-07-2022 நேற்று பாப்பிரெட்டிப்பட்டி மல்லிகா திருமண மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் கா அமுதரசன் மற்றும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில்  திராவிட வரலாறு என்ற தலைப்பில்  நாஞ்சில் சம்பத் அவர்கள் பேசியதாவது, ஒரு காலாச்சார பாசிசம் என் காலை சுற்றுகிறது, ஒரு சனாதன வாள் என் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதியின் அரசு தமிழ்நாடு சட்டமன்ற  நிறைவேற்றி தந்த 21 தீர்மானங்களுக்கு  ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை மேய்வதைப்போல இன்றைக்கு கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்துகிறார் கவர்னர் என்கிற ஆளுநர். இதனால் இந்நாட்டின் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது.இந்த நாட்டினுடைய  அடிப்படைக்கு ஒரு மிகப்பெரிய சித்தரத்தை ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே  மதம், ஒரே பத்திர பதிவு, ஒரே தேர்தல், என்று இந்தியாவை ஒரு சிமிடுக்குள் அடைப்பதற்கு ஆபத்தானவர்களும் மதவாத தீய சக்திகளும், சிந்திக்கிற காலகட்டத்தில் இந்த ஆபத்து தொடர்கதை ஆகாது அதை தொலைத்துக்கட்ட போகிறார்கள் பாப்பிரெட்டிப்பட்டியில் கூடுகின்ற இளைஞர்கள் என்ற தித்திப்பு செய்தியை தமிழ்நாட்டிற்கு  தரவேண்டும் என இளைஞர்களிடம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தடங்கம் சுப்பிரமணி அவர்கள்  தலைமைபொறுப்பேற்று விழாவை சிறப்பித்தார்.முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் கலந்துகொண்டு நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். மாற்றும் சந்திரமோகன், செல்லதுரை, சிட்டிபாபு, மகேஷ்குமார், பிரகாஷ் சதாசிவம் மற்றும் கழக நிர்வாகிகளும் 300 மேற்பட்ட இளைஞர்களும் கலந்துகொண்டனர்.

Comments