கும்பகோணம் அடுத்த வலையப்பேட்டை ஊராட்சி புது தெருவில்
வறுமையின் பிடியில் சிக்கி, எதிர்பாராத சோகத்தைச் சந்தித்த ஒரு குடும்பத்திற்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை ஊராட்சி, மேலச்சத்திரம் புதுத் தெருவில் வசிக்கும் கோவிந்தராஜ் மனைவி சுகன்யா தம்பதியினர் வீட்டின் மண் சுவர், கடந்த திங்கட்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. கூரை வீடாக இருந்தாலும், சுவரின் சேதம் காரணமாகத் தங்குவதற்கு இடமின்றி அந்தக் குடும்பம் திகைத்து நின்றது.
இந்தத் துயரச் செய்தியைக் கேட்டறிந்த அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் துரை சண்முக பிரபு அவர்கள், உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று, நிதி நெருக்கடியில் தவித்த அந்தக் குடும்பத்திற்குப் பெரும் உதவியாக நிவாரணத் தொகையை வழங்கினார்.
இந்த மனிதநேய உதவியின் போது, அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பு அறிவழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே. ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
துயரத்தில் இருந்த குடும்பத்திற்கு உடனடியாகக் கிடைத்த இந்த உதவி, அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் அ, மகேஷ்
Comments
Post a Comment