தருமபுரியில் KFC பீர் குடிப்பவரா நீங்கள் கண்களுக்கு வரும் ஆபத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..?

கே எஃப் சி மதுபானம் அருந்தும் நபர்களுக்கு கண் வலி 


தமிழகத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மதுபான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த மதுபான நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் முதல் அதிமுக, பாஜக, மதிமுக போன்ற அரசியல் பிரமுகர்களின் முதலீடு இருப்பதை நினைத்தால் வேதனையும் கோபங்களும், ஏமாற்றங்களுமே தலையை சுற்றி வருகிறது. தமிழகத்தில் மதுபான ஆலையை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுத்து இதுவரையில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாத அரசுதான் நம் திமுக அரசு என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். படவால்ல எதிர்க்கட்சிகள் மக்களுக்கு குரல் கொடுக்கிறது என்று நினைத்தால் எதிர் கட்சிகளும் ஒரு பக்கம் மதுபான ஆலைகளை நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில் மதுபான பழக்கத்தில் உள்ளவர்கள் தினமும் மதுபானம் குடித்து வருகின்றனர், அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது, என தமிழக அரசே விளம்பரம் செய்து வருகிறது, குறிப்பாக தமிழகத்தில் மும்மரமாக விற்றுவரும்  KFC பீர் வாங்கி குடிப்பவர்களுக்கு சுமார் 48 மணிநேரம் வரை கண் வலி ஏற்படுவதாக மதுபிரியர்கள் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமூத்திரம் பகுதியில் உள்ள மதுபானகடையில் KFC பீர் ஒன்றை வாங்கி குடிக்கும் போது கண் வலி, கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.  இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படும் போது மதுபானத்தின் மூலமாக நடைபெறும் மோசடிகளை தருமபுரி அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. காரணம் ஒரு சில மதுபான பாட்டில்கள் சட்டவிரோதமாக தயாரித்து வரும் மதுபான ஆலையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி வருவாதலையே இது போன்று ஆபத்து ஏற்படுவதாக மதுபிரியர்கள் கூறுகின்றனர். மேலும் KFC நிறுவனத்தின் பீர் குடித்தால் மட்டும் வலி /பாதிப்பு ஏற்படும் என்று சொல்லமுடியாது. எந்த ஒரு மதுபானத்தை அருந்தினால் கூட தலைவலி, கண் எரிச்சல், ஏற்படும் என கூறி ஸ்டிக்கர் ஒட்டி குடி மகன்களுக்கு வழங்கும் மதுபாட்டிலில் மட்டும் 10 ரூபாய் ஸ்டிக்கர் இருக்கும்போது தருமபுரியில் மறைமுகமாக நடத்தி வரும் சந்துக்கடையில் விற்கும் மதுபாட்டில்களில் 10 STIKER இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Comments