பாறாங்கற்கள் மீது ஏறி தவழ்ந்து நடந்து செல்லும் பள்ளி சிறுவர்களின் பள்ளி பயண வாழ்க்கை..! தருமபுரி மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் பலனில்லை...வேடிக்கை காட்டும் அரூர் தாசில்தார்

பாறாங்கற்கள் மீது ஏறி தவழ்ந்து நடந்து செல்லும் பள்ளி சிறுவர்களின் புகைப்படமா இது ? ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்க முடியாத வருவாய்த்துறை.
மாவட்ட ஆட்சியரும் உத்தரவிட்டுள்ளாராம் : ஆனால் பயன் இல்லை....

அரூர் அடுத்த அச்சல்வாடி அருகே உள்ள ஒடசல்பட்டி கிராமத்தின் ஒரு பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சேலம் பகுதியில் மத்திய அரசின் இரும்பாலை திட்டத்திற்கு தங்களின் விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு கொடுத்துவிட்டு பின்பு அரூர் அருகே உள்ள அச்சல்வாடி, கெளாப்பாறை உள்ளிட்ட கிராம பகுதிகளில் தஞ்சம் அடைந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். 
தொடர்ந்து இவர்கள் பல ஆண்டு காலமாக நிலவியல் பாதையை பயன்படுத்தி வந்த நிலையில் தனிநபர் ஒருவர் தன்னுடைய பட்டா நிலம் என தெரிவித்து இந்த பாதையை ஆக்கிரமித்துள்ளார். 
தற்போது இவர்கள் பயன்படுத்தி வந்த அதே பாதையில் வேறு ஒரு பகுதியில், நடந்து செல்வதற்கு கூட வழி விடாத வகையில் பெரிய பெரிய பாறாங்கற்களை போட்டு இருப்பதால் இங்குள்ள மக்கள் சென்று வருவதற்கு வழி இல்லையாம்.  ஏற்கனவே வந்து சென்ற வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென நீதிமன்றத்தின் உத்தரவு இருந்து வரும் நிலையில் தற்போது இதுபோன்ற பெரிய பெரிய பாறாங்கற்களை போட்டு அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஆக்கிரமிப்பாளர்கள்.  
இதனால் பள்ளிக்குச் செல்லக்கூடிய சிறுவர் சிறுமிகள் வழி பாதையில் போடப்பட்டுள்ள பாறாங்கற்கள் மீது ஏறி தவழ்ந்து சென்றது தொலைக்காட்சி செய்திகளில் வெளியிட்டன. இதனை அறிந்த வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆக்கிரமிப்பாளர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பயனும் இல்லை. மாலை 6:00 மணி என்பதால் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளும் ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் எப்போது போலும் சாக்கு போக்குகளை சொல்லி திரும்பி சென்றனர். 
இருந்தபோதிலும் நடந்து செல்வதற்கு கூட வழி பாதை இல்லாத மக்கள் தங்களின் ஆதங்கத்துடன் மாவட்ட ஆட்சியர் சதீஷ் அவர்களை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தாங்கள் படும் இன்னல்களை வெளிப்படையாக காண்பித்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியரும் ஓரிரு நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்ற வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டோம் வட்டாட்சியர் பெருமாள் காலதாமதம் செய்து வருகிறார். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இரண்டு முறை மனு கொடுத்தும் ஏமாற்றம் என்பது தான் உண்மை. இருந்தபோதிலும் ஆட்சியரின் உத்தரவை மதிக்காத வட்டாட்சியர் மேலும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு காலதாமதம் செய்து வருவதாக தெரிகிறது.

எனவே இது போன்ற நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் மருத்துவ அவசர உதவிகளுக்கு தடை ஏற்பட்டும், பள்ளி குழந்தைகள் பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீதிமன்ற உத்தரவையும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவையும் வருவாய் வட்டாட்சியர் மதித்து மக்களை ஏமாற்றாமல் இது போன்ற பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் வாழ்வாதாரத்தை பெருகும் வகையிலும் பள்ளி குழந்தைகளின் வாழ்க்கை முன்னேற்றத்தை பெருக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றனர் பாதிக்கப்படும் மக்கள்.

Comments