எவிடென்ஸ் பார்வை எதிரொலி #திருநாகேஸ்வரம் ராகு கோயில் அருகே மதுக்கடை மூடல்: பா.ம.க. போராட்டம் வெற்றி!
திருநாகேஸ்வரம் ராகு கோயில் அருகில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மதுக்கடையை நிரந்தரமாக இடமாற்றம் செய்யக்கோரி, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் ம.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மக்களின் நீண்ட காலக் கோரிக்கை மற்றும் போராட்டங்களின் விளைவாக, சர்ச்சைக்குரிய அந்தக் மதுக்கடை தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வெற்றிக்குக் காரணமான பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ந. தமிழ்மணி, நகரத் தலைவர் எம்.எஸ். கே. குமார். நகர செயலாளர் நா. சிலம்பரசன்,நகர வன்னியர் சங்க செயலாளர் நவநீதகிருஷ்ணன், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் இணைந்து அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மக்களின் நிம்மதிக்கு இடையூறாக இருந்த மதுபானகடை அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
நிருபர் அ, மகேஷ்
Comments
Post a Comment