நாகேஸ்வரர் கோவில் வாசலில் மதுக்கடையா? தாலிக் கயிறுடன் போர்க்களத்தில் இறங்கிய 'தமிழக வெற்றி கழகத்தினர்.! தஞ்சை மாவட்ட நிருபர் அ, மகேஷ்

கோவில் நகரத்தில் வெடித்தது மக்கள் கோபம்! நாகேஸ்வரர் கோவில் வாசலில் மதுக்கடையா? தாலிக் கயிறுடன் போர்க்களத்தில் இறங்கிய 'தமிழக வெற்றி கழகத்தினர்.!தஞ்சை மாவட்ட நிருபர் அ, மகேஷ்
கோவில் நகரத்தில் வெடித்தது மக்கள் கோபம்! நாகேஸ்வரர் கோவில் வாசலில் மதுக்கடையா? தாலிக் கயிறுடன் போர்க்களத்தில் இறங்கிய 'தமிழக வெற்றி கழகத்தினர்.!தஞ்சை மாவட்ட நிருபர் அ, மகேஷ்

கும்பகோணம்: ஆன்மீகப் பெருமைகள் நிறைந்த கோவில் நகரமான கும்பகோணம் தற்போது பெரும் பரபரப்பில் உறைந்துள்ளது. கும்பகோணத்தில் பழமையான பரிகார ஸ்தலமாக விளங்கும் நாகேஸ்வரர் மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவில் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளது. உச்சிப் பிள்ளையார் கோவில் பின்புறத்தில் நாகேஸ்வரர் கோவில் அருகாமையில் புதியதாகத் திறக்கப்பட்ட தனியார் நவீன மதுபான கடை பார் ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனால் வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளைச் சீண்டி, தீராத கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண்கள் பாதுகாப்புக்கு இந்த வழித்தடம் மிகவும் அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது.
இந்தப் புதிய நவீன மதுபான பார் திறக்கப்பட்டதால் வரலாறு மிக்க கும்பகோணம் கோவில் நகரம் என்ற புனித தன்மை சீரழிவுடன் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய அங்கமாக உருவெடுக்கும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி தலைமையில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி அன்று ஒரு அதிரடிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். உணர்ச்சிப் பிழம்பாக வெடித்த இந்தப் போராட்டத்தின் போது, பெண் நிர்வாகிகள் மற்றும் ஆண் நிர்வாகிகள் கையில் தாலிக் கயிறுடன் வீதிக்கு வந்து, கடையை உடனடியாக அகற்றக் கோரி போர்க்கொடி தூக்கினர்!
இதனால் கோவில் நகரமான கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
*கைது நடவடிக்கை:* 

ஆர்ப்பாட்டத்தின் தீவிரத்தால் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு ரமேஷ் தலைமையிலான காவலர்கள் தமிழக வெற்றி கழகத்தினரிடம் நீண்ட நேரமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், பொறுமையை இழந்த காவல்துறையினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை அதிரடியாக கைது செய்து வாகனங்களில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த நிகழ்வு கடந்த 15ஆம் தேதி கும்பகோணத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.

 *சட்ட விதிகள் காற்றில் பறந்ததா? தவெகவின் குற்றச்சாட்டால் குலுங்கும் மாநகராட்சி நிர்வாகம்!*


பொதுமக்கள் கூடும் இடங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகில் மதுக்கடை அமைக்கக் கூடாது என்ற நீதிமன்ற சட்ட விதியைப் பகிரங்கமாக மீறி இந்தக் கடை திறக்கப்பட்டிருப்பது தமிழக அரசிற்கு பெரும் தலைகுனிவையும் மக்கள் கோபத்தையும் ஏற்படுத்தியதுடன் சட்டத்தைப் படுகொலை செய்து பொதுநலப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்தக் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி தலைமையில் கழக நிர்வாகிகள் இணைந்து (நவ. 17) அன்று RDO ஹிருத்யா விஜயன் அவர்களிடம் வலுவான ஆதாரங்களுடன் இந்த மதுபான கடையால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய தீங்குகளை சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில், இந்தக் மதுகடை விவகாரத்தில் RDO சட்ட ஒழுங்கை பாதுகாப்பதுடன் அவர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு என்னவாக இருக்கும் என்று கும்பகோணம் மக்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Comments