பொதுவாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உறவினர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், பிரசவ வார்டில் தாயார் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 6 வயது சிறுமி ஒருவர் உறங்கும் இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.
அங்கு படுத்திருந்த தினேஷ் என்பவன் சிறுமியிடம் அத்துமீற முயன்றபோது, அங்கிருந்தவர்களின் துணையால் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களில் கூட குழந்தைகளுக்குப் போதிய பாதுகாப்பை தமிழக அரசு மற்றும் காவல்துறை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
நிருபர் அ, மகேஷ்
Comments
Post a Comment