ரகசியத்தை கசியவிடும் தருமபுரி தனிப்பிரிவு காவல்துறை அதிகாரிகள்..! யாரை நம்புவது டிஜிபி யே..! காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வது நியாயமா...?


காவல்துறை உங்கள் நண்பன் சொல்லிட்டு நண்பனுக்கு உதவிகள் செய்யும் சில பாமரமக்களின் முதுகில் குத்தினாள் நண்பனாக ஏற்கமுடியுமா என்ற கேள்வியை முன்வைக்கின்றது சில காவல்துறை அதிகாரிகள் செய்யும் செயல்கள்..! குறிப்பாக 
தர்மபுரி மாவட்டம் மட்டுமல்லாமல் ஒரு சில தாலுகாவில் செயல்பட்டு வரும் காவல்நிலையத்தில் பணியாற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம், மற்றும், சமூக ஆர்வலர்களிடம், செய்தியாளர்களிடம் தகவல்களை வாங்கிக்கொண்டு சந்து கடை நடத்தி வருபவர்களிடமும், லாட்டரி சீட்டு விற்பனை செய்து வரும் நபர்களிடமும், செம்மண், கிராவல் மண், விவசாயத்திற்கு என்று டிராக்டரை வாங்கி கொண்டு கமர்சியல் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் நபர்களிடம், காவல்நிலையத்திற்கு தகவல் நபர்களை யார் சட்ட விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்களோ  அவர்களிடம் காட்டி கொடுத்து மிக நம்பிக்கைக்குரியவராக மாவட்ட தனிப்படை அதிகாரிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக தீபாவளி வந்தாலே போதும், டிப்பர் லாரி, டிராக்டர், ஜேசிபி, போன்ற வாகன ஓட்டிகளிடம் யார் தங்களை பற்றி புகார் தெரிவிக்கிறார், உங்களை பற்றின ரகசியத்தை யார் SP அவர்களிடம் தெரிவிக்கின்றனர், என்பதை பற்றி மாவட்ட தனிப்பிரிவு காவல்துறை அதிகாரியே தெரிவித்தால் இனி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எப்படி துணிச்சலாக எப்படி காவல்துறையிடம் சென்று கூறமுடியும், சட்ட விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களை பற்றி தகவல் தெரிவித்தால் சினிமாவில் வருவது பொய்யல்ல உண்மையான காவல்துறை அதிகாரிகள் இப்படி இருக்கிறார்களே என்று கேள்வி எழுப்பி வருத்தம் தெரிவித்தனர் . குறிப்பாக இந்த சம்பவம், தருமபுரி நகர காவல்நிலையம் முதல் தாலுகா காவல்நிலையம் வரை இப்படி பட்ட நிலை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட கண்காணிப்பாளர்கள், மண்டல கண்காணிப்பாளர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த நேரத்திலும் உயர் அதிகாரிகள் மவுனம் காத்தால்
விசப்பாம்பை கூட நம்பி கூட வச்சுக்கலாம் போல... ஆனால் இவர்களை எப்படி. ..? என்ற ஆச்சர்யமான பதிலால்..நடவடிக்கைக்காக காத்து நிற்கின்றனர். 
நடவடிக்கை எடுப்பார்களா உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுத்திருந்து பார்ப்போம்...!!! ஒருவேளை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சந்துக்கடையில் கள்ளக்கனமாக அரசு மதுபான வியாபாரம் செய்யும் நபர்களின் தொடர்பு என்னையும், செங்கல், கிராவல் மண், டிப்பர் லாரி ஓட்டும் வாகன ஓட்டுநர்களிடம் கேட்டால்.. தனிப்பிரிவு காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு கொள்ளும் அழைப்பேசி என்னையும் வைத்து சோதித்து பார்த்தாள் தெரியவரும்..

Comments