எடப்பாடி பழனிச்சாமிக்கு கும்பகோணம் மக்கள் கடல் அலைகள் போல சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர், #evidenceparvai_Ashok #எடப்பாடி_பழனிச்சாமி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் கும்பகோணத்திற்கு முதல் சுற்று தேர்தல் பிரச்சார பயணமாக வருகை புரிந்த அதிமுகவின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கும்பகோணம் மக்கள் கடல் அலைகள் போல சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்,

கும்பகோணம்:ஜூலை 21-

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் பிரச்சார முதல் சுற்று பயணமாக தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிலையில்
கடந்த ஜூலை21, ஆம் தேதி திங்கட்கிழமை இரவு கும்பகோணம் காந்தி பூங்கா அருகே வந்திருந்த மாண்புமிகு தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கடல் அலைகள் போல சூழ்ந்து கும்பகோணம் மாநகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்

மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்,கே, பாரதிமோகன் தலைமை வகித்தார், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள் திரளானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்,
 அதனை தொடர்ந்து  கும்பகோணம் மாநகர செயலாளர் (மு)சட்டமன்ற உறுப்பினர் ராம,ராமநாதன், டைமன்ட் இறக்கம் முதல் மடத்து தெரு வழி முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் மின் விளக்கு அலங்காரங்கள் என நகரமே பூரிக்கும் அளவிற்கு சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார் மற்றும் ரதிமீனா டிராவல்ஸ் தொழில் அதிபர் பி,எஸ், சேகர் கலந்து கொண்டு பொதுமக்களை வரவேற்றார், 

மேலும் கூட்டத்திற்கு மாநகர இலக்கிய அணி செயலாளர் எஸ், செல்வம் ஏற்பாட்டில் பகுதி கழக மகளிர் அணி நிர்வாகிகள் புரட்சித்தலைவி அம்மா மற்றும் எடப்பாடியார் உருவம் பதித்த பதாகை ஏந்தியவாறு அணிவகுத்து சிறப்பான வரவேற்பு அளித்திருந்தனர், 

செய்தியாளர் அ, மகேஷ்

Comments