நாட்றம்பள்ளி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி. ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் போலீசார் விசாரணை....செய்தியாளர் வீர ராகவன் திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி. ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் போலீசார் விசாரணை


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளக்கல் நத்தம் பேருந்து நிலையம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை சீரமைக்கும் பணிக்காக ஒரு வழி பாதையாக மாற்றியுள்ளனர். 

இந்நிலையில் வெளக்கல் நத்தம் அடுத்த வாலூர் பகுதியைச் சேர்ந்த கோபால் மணைவி சின்ன மாணிக்கம் (70) என்கிற மூதாட்டி சாலையை கடக்க முயன்ற போது வெளக்கல் நத்தம் பகுதியில் இருந்து பர்கூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். 

விபத்து ஏற்பட்ட உடன் டிப்பர் லாரியை விட்டு ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments