வாணியம்பாடியில் திருட்டு நகை வாங்கியதாக கூறி நகை கடை உரிமையாளரை கர்நாடகா காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் நகை கடை வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

வாணியம்பாடியில்  திருட்டு நகை வாங்கியதாக கூறி நகை கடை உரிமையாளரை கர்நாடகா காவல்துறையினர்  விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் நகை கடை வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்


கர்நாடக மாநிலம் பெங்களூரு சாந்தாபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழகத்திலிருந்து சென்று தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சதாம் மற்றும் பிரசாந்த் ஆகியோர் கர்நாடகா காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 13 தங்க செயின்களை  வாணியம்பாடியில் உள்ள நகை கடைகளில்  விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து வாணியம்பாடி பஜார் பகுதியில்  உள்ள நகைக்கடை உரிமையாளர் பாபு என்பவரை கர்நாடகா  காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில் 
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து நகை கடை உரிமையாளரை கைது செய்ததாக கூறி  வாணியம்பாடியில் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வணிகர்கள் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

மேலும் கர்நாடக காவல்துறையினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி கைது செய்து அழைத்து சென்ற நகை கடை உரிமையாளரை உடனடியாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில்  ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் நகைக்கடை உரிமையாளர் திருட்டு நகை வாங்க வில்லை என்றால் கர்நாடகா போலீசாரிடம் பேசி அழைத்து வருவதாக உறுதி அளித்தார்

இதனால் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக நகைகடை உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Comments