ஆக்கரிமிப்புகளை அளக்க தொடங்கிய சர்வேயர்கள், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைகளுக்கு கைமாறப்போகம் 50 லட்சம் - களத்தில் இறங்குமா உளவுத்துறை..!



தமிழகத்தில் ஓடைபொறம்போக்கு, நீர் வழிப்பாதைகள் மற்றும் அரசு இடங்களை அக்கரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள், மேலும் புதிதாக கட்டிவரும் கட்டிடங்களை அதிமுக ஆட்சி இருக்கும் போது இடிக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு மேலும் கடும் கண்டங்களை தெரிவித்தது.

பிறகு அதிமுக ஆட்சி முடிந்த பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் ஓடைபொறம்போக்கு, நீர் வழிப்பாதைகள் அருகில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்படவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் ஒன்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பேருந்து நிலையத்திற்கு அருகிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவாயில் அருகிலும் இருக்கும் ஓடை புறம்போக்கு நிலத்தை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டு வருவதாக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் போராடி வருகிறோம் என சமூக ஆர்வலரான சக்திவேல் அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி அவர்களிடம் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்

மேலும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி அவர்களிடமும் இது குறித்து சமூக ஆர்வலர் சக்திவேல் அவர்கள் அழுத்தம் கொடுத்ததின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி நில அளவயர்களிடம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பணத்தை கட்டிய பின்பு கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதத்தில் நில அளவயர்கள் வருவதாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த மாதத்தில் கடுமையான மழைப்பொழிவு காரணமாக ஆக்கரிமிப்பு நிலங்களை அளக்க தாமதம் ஏற்பட்டுள்ளது என வட்டாட்சியர் தெரிவித்தார். பிறகு 2025 ஆம் ஆண்டு தொடங்கிய பின்னர் சமூக ஆர்வலர் சக்திவேல் மீண்டும் வட்டாட்சியர் அவர்களிடமும் பேரூராட்சி தலைவர் செங்கல் மாறி அவர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார் இதனால் சமூக ஆர்வலர் சக்திவேல் அவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 23-01-2025 ஆம் ஆண்டு அன்று பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவாயில் அருகிலும், அதற்கு ஏதிர்புறம் உள்ள மூன்று அடுக்கு மாடியை சுற்றியுள்ள பகுதிகளையும் அனைத்தும் ஓடை பொறம்போக்கு நிலங்களையும் சர்வேயர்கள் டிஜிட்டல் இயந்திரத்தை வைத்து அளக்க தொடங்கினர். 

அப்போது அங்கே குடியிருந்த சிலர் அய்யோ நமது வீடு, வணிக வளாக கட்டிடங்கள் எல்லாம் இடிக்க தயாராகிவிட்டனர் என்ற அதிர்ச்சியில் மறைமுகமாக பேரூராட்சி தலைவர் செங்கல் மாறி அவர்களிடம் பேசினார்கள்,

ஆனால் அப்போது தலைவர் எந்த பதிலும் கொடுக்காமல் செய்தியாளர்கள் சமூக ஆர்வலர் சக்திவேல் இருப்பதை சுதாரித்துக்கொண்டு நில ஆக்கரிமிப்புகளை அளப்பதில் கவனமாக இருந்தார் செங்கல் மாறி. இறுதியாக ஆக்கிரமிப்புகளை அளந்த சர்வேயர் முருகன் கிராம அலுவலர் கொடுத்த தகவலின் படி 31/1 மற்றும் 29/6 எண் கொண்ட நிலங்களை ஆக்கரிமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனர், இவர்களுக்கு ஓரிரு வாரங்களில் வட்டாட்சியர் வள்ளி அவர்களிடம் இருந்து சம்மன் அனுப்பப்படும் என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் சக்திவேல் கூறுகையில் செங்கல் மாறி அவர்களுக்கு எதிராக செய்தியாளர்கள் என்ற போர்வையில் சிலர் அவரிடம் பணத்தை

பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர்.

இதனால் பேரூராட்சி தலைவர் செங்கல் மாறி செய்தியாளர்கள் நம்மகிட்ட காசு வாங்கிட்டாங்க இனி நமக்கு தொல்லை இல்ல அவங்க நமக்கு அடிமை என்று நினைத்துள்ளார். மேலும் இங்கே ஆயிர கணக்கான ஏழை மக்கள் வீடு நிலம் இல்லாமல் தவித்து வருகின்றனர் ஆனால் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கரமிப்பு செய்து வணிக வளாகங்களை கட்டி பல கோடி சொத்து மதிப்பில் நிலங்களை வாங்கி நல்ல சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் இங்கே இருக்கும் நிலத்திருடர்கள்.

இந்த நிலம் இருந்தால் பாப்பிரெட்டிப்பட்டி வளர்ச்சிக்காக உழவர் சந்தை கட்டிடங்கள். கட்டலாம் அரசு அலுவலகங்கள், கட்டலாம், அரசு தங்கும்விடுதி கட்டலாம், அரசு வணிக வளாகங்கள் கட்டலாம் இப்படி பல்வேறு வளர்ச்சிக்காக இந்த நிலங்கள் பயன்படும் அந்த நிலங்களை முழுவதும் இங்கே இருக்கும் சர்வே எண், 31/1 -இல் நடராஜன் ஆசிரியர் லேட் , குழந்தைவேல் பட்டறை மகன் தமிழ்மணி ரவி பேரூராட்சி துணைத்தலைவர், சக்தி ஹோட்டல் வீடு, மணி வீடு, முருகன் மெக்கானிக் கடை, சர்வே எண் 29/6 இல் வேங்கை மகன் தங்கமணி, 3 கடைகள், வேங்கை மகன் சின்ராஜ், 3 கடைகள், சுக்கம்பட்டி ஆசாரி ஆறுமுகம், மகன் வேலு, ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இவர்கள் மூலமாக பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைகளுக்கு 50 லட்சம் பணம் கைமாறப்போவதாக கூறுகின்றனர், இல்லையென்றால் அருகில் உள்ள பாக்குத்தோப்பு கை மாறப்போகுதாம் அதற்குள் உளவுத்துறை களம் இறங்கினால் இதற்குள் ஊடுருவும் குற்றவாளிகள் அந்த நாடக அரசியல் தலைவர்கள் யார் என்று இந்த பாப்பிரெட்டிப்பட்டி மக்களுக்கு புரியவரும்...!!! இந்த இடம் கிடைத்தால் பாப்பிரெட்டிபட்டிக்கு பிரம்மாண்டமான வளர்சிதான் என்றார் சமூக ஆர்வலர் சக்திவேல் ....

Comments