தருமபுரி மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்ட அப்பட்டமான கட்டுக்கதை கடிதம் -பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்கா சொல்ல கூடாது பொ . மல்லாபுரம் பேரூராட்சியே...!


தருமபுரி மாவட்ட நிர்வாகத்திடம்  கொடுக்கப்பட்ட அப்பட்டமான கட்டுக்கதை கடிதம் -பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்கா சொல்ல கூடாது  பொ . மல்லாபுரம் பேரூராட்சியே...!

தர்மபுரி மாவட்டம் பொ . மல்லாபுரம் பேரூராட்சி பொம்மிடி இதன் சுற்றுப்பகுதிகளின் பிரதான தொழில் விவசாயம்

பெருமளவு காய்கறி, கீரை மற்றும் பல்வேறு பழ வகைகள் பயிரிட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர்

இதனால் பொம்மிடி பகுதியில் தற்போது தினசரி காய்கறி சந்தை, வார சந்தை போன்றவை சிறப்பாக செயல்பட்டு  பேரூராட்சிக்கு பெரும் வருவாய் ஈட்டி தருகிறது

 இதை கருத்தில் கொண்டு  விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் உற்பத்தியாகும் காய்கறி பல வகைகளை நேரடியாக பொதுமக்களுக்கு சேரும் வகையில் பொம்மிடி பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது

                                       

 இதன் பேரில் இப்பகுதி சமூக ஆர்வலர் ஜெபசிங் என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கு கடந்த ஆண்டு பொம்மிடி பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என 23/02/2023 அன்று கோரிக்கை மனு அளித்திருந்தார் 





இதன் பேரில் மாவட்ட வேளாண்மை துறை சார்பில் கடிதம் ஒன்று பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொம்மிடி பகுதியில் உழவர் சந்தைக்கு நிலம் ஒதுக்கி ஒப்படைக்கும் பட்சத்தில் உழவர் சந்தை தங்கள் அமைத்துக் கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது

 அதற்கு பொ.மல்லாபுரம் பேரூராட்சி நிர்வாகம்  தங்கள் பேரூராட்சி எல்லைக்குள் எங்கேயும் அரசு புறம்போக்கு இடம் இல்லை என போரூராட்சி தீர்மான  எண் 276 இல் தெரிவித்து 29 /12 / 2023 அன்று  கடிதம் மூலமாக வேளாண்மை துறைக்கு அனுப்பி வைத்துள்ளது

 இதையடுத்து வேளாண்மை துறை கடந்த 23/ 01 /2024 ஆம் தேதியில்  மனுதாரர் சமூக செயல்பாட்டாளர் ஜெப சிங்குக்கு வேளாண்மை துறை சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது


 அதில் பொ. மல்லாபுரம் பேரூராட்சி நிர்வாகம் உழவர் சந்தை அமைப்பதற்கான புறம்போக்கு இடம் தங்களிடம் இல்லை என்பதால் இத்திட்டத்தை பேரூராட்சிக்குள் நிறைவேற்ற முடியாது என கடிதம் அனுப்பி உள்ளதாகவும் எனவே உங்களது மனு நிராகரிக்கப்படுவதாக வேளாண்மை துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

 இச்சம்பவம் விவசாயிகள் மத்தியில்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது | ஒரு பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் மக்களின் வளர்ச்சிக்காகவும், அரசின் நல திட்டங்களும், மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்களும்  வந்து சேருவதில் பெரும் அக்கறை எடுத்து திட்டத்தை எப்படியாகிலும் நிறைவேற்ற அக்கரை எடுக்க வேண்டும்

 அதற்கு மாறாக விவசாயிகள் & பொதுமக்கள் பயனடையும் வகையில் நிறைவேற்றி தர வேண்டும் என்பதில் அக்கறை காட்டாமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், கட்டுமான பணிகளையும் ,போலி ஆவணங்கள் மூலமாக புறம்போக்கு நிலத்தையும் விற்றும் ஆக்கிரமிப்பு செய்தும் வருகின்றனர்

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக  பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டெடுத்து பொதுமக்களின் தேவைக்காகவும் ,வளர்ச்சி திட்டத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும் ,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments