சொன்னதை செய்துவிட்டார் "அரசியல் சூப்பர் ஸ்டார் பி பழனியப்பன்" கொண்டாட்டத்தில் அரூர் திமுக தொண்டர்கள்..!
சொன்னதை செய்துவிட்டார் அரசியல் சூப்பர் ஸ்டார் பி பழனியப்பன்
கொண்டாட்டத்தில் அரூர் திமுக தொண்டர்கள்
திரைப்படங்களில் சூப்பர் ஸ்டாராக வளம் வரும் ரஜினிகாந்தின் முக்கிய வசனமாக இடம்பெற்ற வார்த்தைகள் " நான் சொன்னதைத்தான் செய்வேன்" - "செய்வதைத்தான் சொல்வேன்" என்ற வசனம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து அந்த ரசிகர்களையும் சரியான வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றதுதான் அந்த வசனம். இது போன்ற வசனங்கள் சினிமாவில் மட்டும்தான் பேசப்பட்டு பில்டப் காண முடியும்.
ஆனால் நிதர்சனமான வாழ்வில் மக்களின் வாழ்விடத்தில் மக்களோடு மக்களாய் இடம் பெயர்ந்து மக்களின் வாழ்வியலின் வளர்ச்சிக்காக மனித வாழ்வியலில் செந்நிற குருதியாய் ஓடும் அரசியல் பயணத்தில் உண்மையான சூப்பர் ஸ்டார் யார் என்றால் முன்னாள் அமைச்சர் தற்போதைய தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எங்கள் அண்ணன் பி பழனியப்பன் _ தான் என தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தருமபுரிக்கு தாய் நகரமாக இருந்து வரும் அரூர் பகுதி அரூரின் பழைய பெயர் அரியூர் என்பதாகும். கல்வெட்டுகளும் இந்த ஊரை 'அரியூர்' என்றே குறிப்பிடுகின்றன. 'அரூர்' என்பது அதன் திரிபு. இந்த ஊரை, கிராம மக்களில் பலர் இன்னமும் அதன் பழைய பெயரான அரியூர் என்றே குறிப்பிடுக்ன்றனர். அரூர் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. 2011இல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,607 வீடுகளில் 25,469 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 12,543 ஆண்கள், 12,926 பெண்கள் ஆவார்கள். அரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%; பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் அரூர் ஒன்றாகும்.இந்த வட்டத்தின் தலைமையகமாக அரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 165 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டம் அரூர், தீர்த்தமலை, மொரப்பூர் என 3 உள்வட்டங்களை கொண்டது. இப்படி இருக்கையில் அரூரை நகராட்சியாக மாற்ற பல்வேறு சமூக ஆர்வலர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்தும் அரூரை நகராட்சியாக மாற்ற யாரும் முன் வரவில்லை காரணம் அரூரை சுற்றி அதிகமாக குடியிருந்து வருபவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள், இவர்களின் வளர்ச்சியை தடை செய்யவே அரூர் பகுதியை முட்டு சந்தில் வைத்து அழகு பார்த்து மெத்தனம் காட்டியது அதிமுக. இதனால்தான் இந்த அரூர் பகுதியை எந்த ஒரு வளர்ச்சிக்கும் முன்னேறாமல் நேர நேரத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் நடராஜா வாழ்க்கையை தொடங்கியது. ஆனால் அப்போது பாஜகவுடன் கூட்டணியாக இருந்த போது டிஜிட்டல் இந்தியாவாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி அவர்கள் கூறிய பின்னர் மிக பிரமாண்ட வரவேற்பு கொடுத்து அரூர் போன்ற பெரும் நகர பகுதிகளை டிஜிட்டல் பகுதியாக மாற்ற முன்னேற்பாடு செய்யாமல் டிங் டாங் பெல் அடித்துக்கொண்டு சிரித்து வந்தது அதிமுக ஆட்சியின் கையசைவுகள்.
இப்படி இருந்த அதிமுக ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 2021 ஆண்டு திமுக ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்த உடனே முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார் இந்த செயலாட்சியை பார்த்து முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். அப்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இனி தருமபுரியை பற்றி எனக்கு கவலை இல்லை எல்லாம் பழனியப்பன் பார்த்து கொள்வார் என்று முதல்வர் நம்பிக்கை வைத்து உரையாற்றிய காட்சிகள் தருமபுரி திமுக தொண்டர்களிடையே பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியது.
காரணம் அந்த அளவிற்கு அண்ணன் பழனியப்பனின் செயல்பாடுகள் இருக்கும் என திமுக தொண்டர்கள் கூறுகின்றனர். 2022 ஆம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் அரூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அரூர் பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருப்பது அரூரை நகராட்சியாக மாற்ற வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் அண்ணன் தளபதியார் அவர்களிடம் கூறி அரூரை நகராட்சியாக மாற்றப்படும் மேலும் அரூர் பகுதிக்கு புதிய பேருந்து நிலையம் கட்டித்தரப்படும் என்றார் அந்த வாக்கு இன்று நிறைவேறிவிட்டது. இது திமுக தொண்டர்களாகிய எங்களுக்கும் எங்கள் அரூர் பகுதிவாழ் மக்களுக்கும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும், உள்ளது.
அடுத்த 5 ஆண்டும் திமுக ஆட்சியமைத்தால் அரூர், ஊத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், மொரப்பூர், பொம்மிடி, நரிப்பள்ளி போன்ற பகுதிகளை உள்ளடக்கி அரூரை மாவட்டமாக உயர்த்த வேண்டும் என பலமுறை செய்தியாளர்கள் செய்தி வெளியிட்டனர் "அதன் கோரிக்கை" கோரிக்கையாக இருக்காது எங்கள் அண்ணன் திமுக மேற்கு மாவட்ட செயலாளரின் செயலால் அது வரலாறாக மாறும்..!! இதற்காகத்தான் முன்னாள் அமைச்சர் தற்போதைய தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பனை அரசியல் சூப்பர் ஸ்டார் என்கிறோம் என்றனர் திமுக ஆதரவாளர்கள்
Comments
Post a Comment