தர்மபுரி மாவட்டத்தில் மாதத்தில் பத்து தடவைக்கு மேலாக ஒகேனக்கல் நீர்வரத்து குறித்து செய்திகள் வந்தாலும் அந்த ஒகேனக்கல் நீர்வரத்தின் மூலமாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தி இருந்தாலும்
இன்னும் தர்மபுரி மாவட்டத்தில் குடிநீருக்காக பொதுமக்கள் சாலைகளில் தண்ணீர் குடங்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காட்சிகளும் சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியும் ஏற்படுத்தித் தான் வருகிறது. பணம் பொருளாதாரம் கொண்ட மக்கள் யாரும் சாலைகளில் தங்கள் வீட்டில் உள்ள குடங்களை எடுத்து
வந்து குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவதில்லை.
ஒவ்வொரு அரசையும் நம்பி அதிகாரிகளை நம்பி ஒருவேளை சோற்றுக்காக இயக்கப்படும் ஏழை மக்கள் ஒடுக்கப்படுகின்ற மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கும் கூலி தொழிலாளிகள்,
என இப்படிப்பட்ட மக்கள்தான் தங்கள் உரிமைகளை கேட்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறை மூலமாக பல வழக்குகளை சந்தித்து தன்னுடைய வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.
இப்படி தன்னுடைய வாழ்வாதாரத்திற்கான உரிமைகளை கேட்பதற்காக போராடும் ஏழை மக்களுக்கு காவல்துறை மூலமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஏழை மக்களின் வாழ்வாதாரமே பெருமளவில் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் சூழல் உருவாகிவிடுகிறது.
இதற்கு காரணம் என்ன என்று அடிப்படையான ஒரு சித்தாந்தத்தை கூட உணராமல் அரசு ஊழியர்கள் மெத்தனப் போக்கில் இருந்து வருவது வெட்கக்கேடானது இப்படிப்பட்ட சம்பவங்கள் தான் தர்மபுரியில் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது குறிப்பாக நேற்று காலை சுமார் 9 மணி அளவில் சேலம் மற்றும் அரூர் நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பட்டுக்கோனாம்பட்டி
பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணா நகரில் வசிக்கும் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் அவர்களிடம் மனுக்களை கொடுத்தும் கூட ஒகேனக்கல்
கூட்டு குடிநீர் கிடைக்கவில்லை மேலும் அப்பகுதியில் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் கூட குடிநீர் கிடைக்கவில்லை
என்று புகார் கொடுத்துள்ளனர் இதுவரையில் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் ஈடுபடுவதில்லை என்பதே அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு இதனால் பல மாதங்களாக குடிநீர் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் நேற்று சேலம் மற்றும் அரூர் நெடுஞ்சாலையில் உள்ள சாமிபுரம் கூட் ரோட்டில் சுமார் 15க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள்
காளி குடங்களுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் அறிந்து பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் அவர்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் உங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வசதியை ஏற்படுத்தித் தருவேன் என்று உறுதி அளித்துள்ளார் மேலும் நெடுஞ்சாலை பணிகளால் குடிநீர் குழாய்கள் உடைந்து ஆங்காங்கே குடிநீர் வீணாகி வருகிறது.
சாலை பணிகளின் போது இந்த பகுதியில் குடிநீர் குழாயை கவனமாக பார்த்து வேலை பார்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Comments
Post a Comment