முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அரூருக்கு வருகை..! சட்டமன்ற உறுப்பினர் சம்பத் புகைப்படம் இல்லாத பேனர்.! உடைந்துபோகும் அரூர் மக்களின் வாக்கு வங்கி..!அதிமுகவில் நுழைந்தது சாதி அரசியலா..? கோஷ்டி அரசியலா..?அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியை அசிங்கப்படுத்திய அதிமுகவின் விளம்பர பேனர் - விசாரணை நடத்துவாரா..அண்ணண் எடப்பாடி..?

முன்னாள் முதல்வர் பழனிச்சாமி  அரூருக்கு வருகை
சட்டமன்ற உறுப்பினர் சம்பத் புகைப்படம் இல்லாத பேனர்.!

உடைந்துபோகும் அரூர் மக்களின் வாக்கு வங்கி..!

அதிமுகவில் நுழைந்த சாதி அரசியலா..?  கோஷ்டி அரசியலா..?

அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அசிங்கப்படுத்திய அதிமுகவின்  விளம்பர பேனர் - விசாரணை நடத்துவாரா..அண்ணண் எடப்பாடி..?

தருமபுரி
நாளை தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள கொங்கு திருமணம் மண்டபம் அருகில் கொங்கு பல்நோக்கு பயிற்சி மையத்தை திறப்பதற்கு வருகை தர உள்ளார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

இதனால் அரூர் நகர் முழுவதும் அதிமுகவின் கொடிகள், விளம்பர பேனர்கள் என கொடி கட்டி பட்டய கிளப்ப தொடங்கிவிட்டனர் அரூர் அதிமுக தொண்டர்கள். 

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்நோக்கு பயிற்சி மையத்தை திறப்பதற்கு வருகை தருவதன் கூடவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற தனது கொங்கு சமூகத்தை வலுப்படுத்த வருவதாகவும் பொதுவாக  கூறப்படுகிறது.

மறுபக்கம் அரசியல் ரீதியாக பார்க்கும் போது ஒட்டுமொத்த தருமபுரியில் உள்ள அனைத்து சமூக அதிமுக தொண்டர்கள் இந்த கூட்டத்திற்கு வருவதற்கு இந்த நிகழ்ச்சி பெருமளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதாவது மண்டபத்தின் அருகில் கோட்டை வடிவில் வடிவமைத்தும் அருகில் உள்ள நெடுஞ்சாலை முழுவதும் விளம்பர பேனர் கொடிகள் என அண்ணண் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வருகைக்கு மாஸ் காட்டியுள்ளனர். அதிமுக நிர்வாகிகள். 
இப்படி மாஸ் காட்டி பேனர் விளம்பரங்கள் செய்திருந்தாலும் சுமார் 4 க்கும் மேற்பட்ட  விளம்பர பேனர்களில் உட்கட்சி பூசலால் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்களின் புகைப்படத்தை போடாமல் வைத்துள்ளது இது சாதியாக இருக்கலாம் இல்ல கோஷ்டி அரசியலாக இருக்கலாம் என அரூர் அதிமுக தொண்டர்களே தலையில் அடித்து கொள்கின்றனர்.

அம்மா இருக்கும் போது அதிமுகவில் எவ்வளவுதான் உட்கட்சி பூசல் இருந்தாலும் அது வெளி வராமல் அதிமுகவுக்கு பெரும் தன்மானத்தை கட்டி காத்து வந்தது அதிமுக குடும்பம் அதுதான் அம்மாவின் கெத்து. 

ஆனால் அம்மா மறைந்து பின்னர் பெரும் போராட்டங்களை கடந்து கட்சியை காப்பாற்றி அனைத்து தொண்டர்களை ஒன்று திரட்டி எழுச்சி புரட்சியை செய்துள்ளார் அண்ணண் எடப்பாடி பழனிச்சாமி.  அப்படி இருக்கும் போது அரூரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசலை அம்பலப்படுத்தி அண்ணண் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசியலின்  எழுச்சி புரட்சியை கேவலப்படுத்தி விட்டனர் மொரப்பூர் அதிமுக நிர்வாகிகள்.

பாப்பிரெட்டிப்பட்டி அரூர் என்று இந்த பகுதியில் அதிமுக நிகழ்ச்சி நடந்தால் பாப்பிரெட்டிப்பட்டி அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் கோவிந்தசாமி என இருவரின் புகைப்படங்களை வைத்து அதிமுகவின் ஒற்றுமையை உறுதி செய்வார்கள் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள்.

ஆனால் அரூரில் தற்போது நடக்கும் அதிமுகவின் இந்த விளம்பர பேனர் அரசியலால் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் அதனால்தான் என்னவோ அவரின் புகைப்படத்தை போடாமல் வைத்து எம் எல் ஏ சம்பத்குமாரை கேவளபடுதுவதாக நினைத்து அதிமுகவின் ஒற்றுமையையும், அண்ணண் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் அசிங்கபடுதியுள்ளனர் என்கின்றனர் அரூர் அதிமுக நிர்வாகிகள்.
இப்படி அதிமுக வட்டாரத்தில் உட்கட்சி கோஷ்டி அரசியலுக்கு ஒரு முற்று புள்ளி வைக்காமல் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் அமைதி காப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் 
அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்கள் தற்போதைய திமுக ஆட்சியில் கூட தன்னை தேடி வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்தும் பல்வேறான உதவிகளை செய்தும் பெரும் பாராட்டை பெற்று உள்ளார். அப்படி இருக்கும்போது சட்ட மன்ற உறுப்பினர் சம்பத் புகைப்படம் வைக்காமல் இருப்பது சாதியாக இல்லை கோஷ்டி அரசியலா என்று கள ஆய்வு செய்தால் 
சம்பத்குமார் அவர்களின் புகைப்படம் இல்லாத பேனரில் சம்பத்குமாரின் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் புகைப்படம் இடபெற்றுள்ளது. மேலும் அந்த பேனரில் அரூர் தெற்கு ஒன்றிய  செயலாளர் ஆர் ஆர் பசுபதியின் புகைப்படமும் இடம்பெறவில்லை அப்போது தான் தெரிய வந்தது இது சாதி அல்ல கோஷ்டி அரசியல் என்று..
அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்ன நிலை ஏற்பட்டாலும் அதிமுக நிர்வாகிகள் பிரிந்து தனிமையில் பயணம் செய்ய கூடாது உங்களுக்காக நான் உயிர் உள்ளவரை இருப்பேன் நமக்குள்ள எந்த சாதிய பாகுபாடும் இருக்க கூடாது என்று அவ்வபோது உரையாற்றி ஏழை எளிய மக்களின் போராளியாக இடம்பெற்றவர். அப்படிப்பட்ட போராளி வருகையின் போது கட்சிக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனையை ஊர் முழுவதும் டமார் அடித்து இப்பகுதி மக்களின் மனதில் அதிமுகவில் ஒற்றுமை இல்லை எல்லாம் கோஷ்டி அரசியல் தான் என உறுதிபடுத்தி விட்டனர் மொரப்பூர் அதிமுக நிர்வாகிகள் . 

எதுவாக இருந்தாலும் துணிந்து செய்
உனக்காக நான் இருக்கிறேன் என்பது தலைவனின் குரல் 

எதுவாக இருந்தாலும் துணிந்து உரிமையை கேள் உனக்காக நான் இருக்கிறேன் என்பது தலைவனின் குரல்

எந்த சூழ்நிலையிலும் உங்களுக்காக என் உயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காக இருப்பேன் என்று கூறிய அண்ணண் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வருகைக்கு
இது பெருமளவில் அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்

இனி வரும் காலங்களில் தொண்டர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை வலு படுத்தி இது போன்று கட்சிக்குள் பிரிவினையை ஏற்படுத்தி ஓட்டை சிதறடிக்கும் நபர்கள்  (தொண்டர்கள்) அல்ல நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா அண்ணண் எடப்பாடி பழனிச்சாமி என்ற எதிர்பார்ப்பில் அரூர் சட்டமன்றத் தொகுதிகளில் உண்மையான தொண்டர்கள்.

Comments