வெற்றித் தமிழா பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் கல்வி விழா.. தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கலந்து கொண்டார்
வெற்றித் தமிழா பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் கல்வி விழா.. தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கலந்து கொண்டார்
பாப்பிரெட்டிப்பட்டி
தமிழகத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வு நேரங்களில் படிப்பது, பயிற்சி பெறுவது போன்ற செயல்களில் தடுமாறி நிற்கின்றனர். இதனால் மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வியில் வெற்றி பெறாமல் வாழ்கையில் வெற்றி பெறுவதில் சிரமத்தில் உள்ளனர். அதனால் பல்வேறு அரசு கல்லூரிகளில் போட்டி தேர்வுக்கான செயலுக்கு விழிப்புணர்வு பயிற்சி ஏற்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் இன்று வெற்றித் தமிழா தகடூர் புத்தக பேரவை தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போட்டி தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தேர்வு, தமிழ் வளர்ச்சி, செய்தித்தாள் படித்தல், படிப்பதை நினைவு கூர்வது, நூல்கள் படிப்பது, குறித்தும் தேர்வு எழுதும் போது மன தைரியத்துடன் இருத்தல் போன்ற முக்கியமான கருத்துக்களை வெற்றி படிக்கட்டுகள் என்ற தலைப்பில் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிலி ராஜ்குமார் கலந்து கொண்டு மாணவர்களிடையே நம்பிக்கை தரும் வகையில் உரையாற்றி சென்றார். இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சி நிரல் ஆக இறைவணக்கம் செலுத்தி மருத்துவர் இரா செந்தில் அவர்கள் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் செயலாளர் தகடூர் புத்தக பேரவை அவர்கள் சிறப்பாக வரவேற்பு செய்தார் பிறகு பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அன்பரசி, முன்னிலை சிசுபாலன், தங்கமணி ஒருங்கிணைப்பாளர் தகடூர் புத்தக பேரவை, இராம. செல்வம் இ ஆ பா செயல் இயக்குனர் இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி கழகம் சென்னை, விடா முயற்சியும் வெற்றியும் என்ற தலைப்பில் அருண் உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை திருவண்ணாமலை மாவட்டம், போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள ஆங்கிலம் ஒரு தடைகளை என்ற தலைப்பில் ஆர் மனோகரன் மேனாள் ஆங்கில துணைத் தலைவர் ஜி டி என் கலைக்கல்லூரி திண்டுக்கல் எளிது எளிது அரசு வேலை எளிது என்ற தலைப்பில் எஸ் ஆல்பர்ட் பெர்னான்டோ மாநில கருத்தாளர் தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை நன்றி உரை முனைவர் வி. ரவி, இயற்பியல் துறை தலைவர் மற்றும் 800க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்து மகிழ்ந்தனர்
Comments
Post a Comment