மானை வேட்டையாடிய நடிகர் சல்மானுக்கு 6 மாசம் ஜெயிலு... தருமபுரி இளைஞருக்கு 30 ஆயிரம் பைனு.... "இந்த கதை நல்லா இருக்கே.."70 ஆயிரம் பைன் கொடுத்தால் போதும் மான் கறி இலவசம் - கப் சிப் அரூர் வனத்துறை..! ஒரே சாதி அதிகாரத்தின் கூட்டு சதி...

மானை வேட்டையாடிய நடிகர் சல்மானுக்கு 6 மாசம் ஜெயிலு... தருமபுரி இளைஞருக்கு  30 ஆயிரம் பைனு.... "இந்த கதை நல்லா இருக்கே.."
70 ஆயிரம் பைன் கொடுத்தால் போதும் மான் கறி இலவசம் - கப் சிப் அரூர் வனத்துறை..! ஒரே சாதி அதிகாரத்தின் கூட்டு சதி...

நடவடிக்கை எடுப்பாரா சுகப்பிரியா ஷாகு ஐ ஏ எஸ்

தருமபுரி மாவட்டத்தை சுற்றிலும் மலைகள், காடுகள் நிறைந்த பகுதியாக உள்ள நிலையில் காரிமங்கலம், ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி பகுதியில் யானைகள், காட்டெருமைகள், மாங்கள், காட்டு பன்றிகள், என காட்டு விலங்குகள் அவ்வபோது படையெடுக்க தொடங்கி விடுவது நாம் அறிந்த செய்தியே..

 கடந்த 29-01-2024 தேதியன்று கூட பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள மோளையாநூர் கிராமத்தில் காட்டெருமைகள் உணவு மற்றும் குடிநீரைத்தேடி படையெடுத்து வந்தன. ஒரு சில நேங்களில் நீர் இல்லாமல் உணவில்லாமல் காட்டெருமைகள் இறந்து போவதும்,  மான்கள் கம்பி வேலியில் மோதியும், இறந்து விடுகின்றனர். இதனால் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. இதனால் வனவிலங்குகள் மட்டும் குறையவில்லை எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்வியலும் இயற்கையும் அழிவு நிலைக்கு செல்லும் என்பதை நாம் தினம் தினம் ஒரு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டாலும் நாம் ஒரு போதும் உணர்ந்ததில்லை. 
இயற்கையால் வனவிலங்குகள் இறப்பதை காட்டிலும் மனிதர்களால் வன விலங்குகள் இறப்பதுதான் அதிகம் என வனத்துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீதும் வனவிலங்குகளின் இறைச்சியை விற்பவர், வாங்குவபவர் மீதும் நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டத்தை வனத்துறை கொண்டுவந்தது.

அப்படி சட்டங்கள் இருந்தும் ஒரு சில பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் மான் வேட்டையாடும் நபர்களை கண்டறிந்தால் அவர்களை அழைத்து பேரம் பேசி லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு நடந்த சம்பவத்தை பற்றி தடையமே இல்லாமல் அழித்து விடுகின்றனர். 

குறிப்பாக ஒரு சில ஊர்களில் பணியாற்றும் வனத்துறை சேர்ந்த ரேஞ்சர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் தான் சார்ந்த சொந்த சாதியில் சக வனத்துறை ஊழியர்கள் மூலமாகவும்,  சொந்த சாதியின் உறவு காரர்களின் துணையோடும், தங்கள் சாதிக்காக குரல் கொடுக்கும் கட்சி அமைப்புகளோடு இணைந்து மான் வேட்டையாடும் நபர்களிடம் பணம் கையாடல் செய்யும் சதி திட்ட வேலைகள் ஆங்காங்கே நாடைபெருவதால் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட உண்மை சம்பவத்தை அறிந்து ஆய்வு செய்ததில் தருமபுரி மாவட்டம் அரூர் வனத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கியது.

கடந்த ஞாயற்று கிழமை சாலூர் பகுதியை சேர்ந்த பசுபதி என்பவர் மான் வேட்டையாடி  மான் இறைச்சியை வேட்டையாடியதாக  இருளப்படி பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுக்கு மான் கறி விற்றதாக எழுந்த புகாரில் அரூர் வனத்துறை விசாரணையை தொடங்கி சுமார் ஒரு வார காலமாக வழக்கு பதிவு செய்யாமல் பேரம் பேசி இழுப்பரியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

விசாரணையை தொடங்கிய முதல் நாளே  அரூர் வனத்துறை அதிகாரியான நீலகண்டன் தலைமையில் சம்பந்தபட்ட பசுபதியை தேடிச் சென்று அரூர் வனத்துறைக்கு வா உன்னை விசாரித்து விட்டு விடுகிறோம் என அழைத்து சென்றுள்ளனர் அப்போது அவருடைய மனைவியும் சென்றுள்ளார். விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் விசாரித்ததில் பசுபதி உணமையை ஒப்புக்கொண்டார். நாய் துரத்தி கொண்டு வந்தது அப்போது அடிபட்ட மான் கல்லில் மோதி இறந்து போனது அந்த கறியை சாப்பிட ஆசியாக இருந்தது. இதனால் தன்னுடைய தெரிந்த வட்டாரங்களில் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஆனால்..அதை ஏற்காமல் இருந்த வனத்துறை அதிகாரிகள்  நீ மானை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாய்
என ஒப்புக்கொள் என ஸ்பெசல் டீம் என்ற பெயரில் தருமபுரியில் இருந்து வந்த ஒரு சில வனத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து சுமார் 7 பேர் கொண்ட கும்பல் பசுபதியின் மனைவி முன்பே பசுபதியின் கால் மீதும், அவரின் நெஞ்சு பகுதி மீதும், தொடை என பல்வேறு பகுதிகளில் 
கடுமையாக தாக்கியுள்ளனர். குறிப்பாக ஆலயமணி என்பவர் பசுபதி கண்ணை கட்டி தாக்கியுள்ளார் பசுபதி கையில் துப்பாக்கியை கொடுத்து ஓட விட்டு பசுபதியின் காலில் அடித்துள்ளனர். 
பின்னர் பசுபதியின் தலை, மற்றும் காதுக்குள் குச்சிய விட்டு,  கடுமையாக தாக்கியுள்ளனர். இப்படி கொடூரமான முறையில் நடந்து கொண்ட அரூர் வனத்துறை அதிகாரிகள் பசுபதியின் மனைவியுடன் பேச்சி வார்த்தை நடத்தி சுமார் 2 லட்சம் பணத்தை கேட்டுள்ளனர். இந்த பணத்தை கொடுக்க வழியில்லாமல் பைனான்சியரிடம் 50000 ஆயிரமும், தன் காதில் இருந்த தோடை வைத்து 10000 ஆயிரமும் பசுபதி மனைவி கொடுத்துள்ளார். பசுபதியிடம் நான் நல்ல நிலையில் உள்ளேன் என்பதை போல் கையெழுத்து வாங்கிவிட்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். பசுபதியிடம் கறி வாங்கிய நபரிடம் பல்வேறு அரசியல் நபர்களை வைத்து 30000 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி எந்த ஒரு சம்பவமும் நடைபெறாதுவாரு ஒரு சிறு துளி கூட தடைமே இல்லாமல் செய்துள்ளனர் ஆனால் வனத்துறை அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை சோதித்தால் வெளிவட்டாரத்தில் இருந்து வந்த அரசியல்வாதிகள் ஏன் இந்த பகுதிக்கு வரவேண்டும் என்று மற்றும் அவர்களுடைய தொடர்பு எண்களை வைத்து விசாரித்தால் இவர்கள் மான் கறி சம்பந்தப்பட்ட விஷயத்திற்காகத்தான் வேற பேச வந்தார்கள் என்பது தெரியவரும்.. பசுபதியின் மனைவியிடம் வாங்கிய பணத்திற்கு இதுவரை ரசீது கொடுக்கவில்லை காரணம் எல்லாம் 
மூடி மறைப்பதற்கான திட்டமிட்ட செயல் என்று ஒரு சில வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 

ஒருவர் தவறு செய்துவிட்டால் அவரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டியது இந்திய சட்டத்தின் சாசனம்.
ஆனால் சட்டத்திற்கு புறம்பாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி பணத்திற்காக மட்டுமே பணிகளை மேற்கொள்ள நினைத்துள்ளனர். மறுபக்கம் வனத்துறை அதிகாரகள் ஒரே சமூகத்தில் சிலர் உள்ளதால் அவர்கள் திட்டமிட்டு கூட்டு சதி செய்துள்ளனர் இந்த சம்பத்தில் ரேஞ்சர் நீலகண்டன் உட்பட பலர் உள்ளனர்.  மேலும் மனித தன்மையை மீறி மிருகங்கள் எப்படி மனிதனை வேட்டையாடுமோ அதே போல் அரூர் வனத்துறை அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக மனிதர்களை வேட்டையாடி வருகின்றனர்.

மான் வேட்டையாடிய நபர் மீது சட்ட ரீதியாக என்ன நடவடிக்கையோ
அதே நடவடிக்கையாக
வனத்துறை அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது பசுபதியின் உடம்பில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதால் அவர் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments