பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தர்மபுரி சுற்றுப்பயணம் கிறிஸ்துவ ஆலயத்திற்குள் வருவதற்கு அப்பகுதி இளைஞர்கள் கடும் எதிர்ப்பு
கிறிஸ்துவ ஆலயத்திற்குள் வருவதற்கு அப்பகுதி இளைஞர்கள் கடும் எதிர்ப்பு
வாக்குவாதம்
பரப்பரப்பு
தர்மபுரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் சுற்றுப்பயணம் கடந்த 7ம் தேதி 8ம் தேதி என இரண்டு நாட்கள் மேற்கொண்டார்
8ம் தேதியான இன்று மாலை 6:30 மணியளவில் பொம்மிடி அருகே உள்ள பி, பள்ளிப்பட்டி புகழ்பெற்ற கிறுஸ்தவபுனித லூர்து அன்னை மலைக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய சென்றார்
அப்போது அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு அன்னையின் திரு உருவம் பொறித்த சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அப்போது அந்த இளைஞர்கள் கிறிஸ்துவ சிறுபான்மையினர் மணிப்பூர் மாநிலத்தில் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எனவும்
பாஜக நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்? என்று சரமாரியாக கேள்விகளை கேட்டனர்
அந்த இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களிடம்
மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியினரான இரு பிரிவினர் இடையே மோதலில் ஈடுபட்டனர், இதில் பாரதிய ஜனதா கட்சி அரசு தக்க நடவடிக்கை எடுத்ததாக எடுத்துக் கூறினார்
இருந்த போதும் அங்கிருந்த இளைஞர்கள் அந்த பதிலை ஏற்றுக் கொள்ளாமல் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அன்னையின் உருவத்திற்கே மாலை அணிவிக்க கூடாது என கோஷம் எழுப்பினர்
அவர்கள் எதிர்ப்பையும் மீறி அண்ணாமலை அன்னையை உருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்
அப்போது இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்
காவல்துறையினர் தகராறு ஈடுபடக்கூடாது என இளைஞர்களை விரட்டி அனுப்பி வைத்தனர்
சம்பவம் சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்றது
இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Comments
Post a Comment