தர்மபுரிக்கு அண்ணாமலை வருகை தலைவிரித்தாடும் ஜாதி சண்டை - ஓ பி சி அணி தனி பேனராம் பட்டியலணி தனி பேனராம் - அண்ணன் அண்ணாமலை மாற்றுவாரா..?..? எதிர்பார்ப்பில் பாஜக தொண்டர்கள்...


தர்மபுரிக்கு அண்ணாமலை வருகை தலைவிரித்தாடும் ஜாதி சண்டை பரபரப்பான தகவல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில முழுவதும் கடந்த சில மாதங்களாக நடைபயணம் மேற்கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தொண்டர்களை தயார் படுத்தி வருகிறார்.


தற்போது தர்மபுரி மாவட்டத்தில் வருகின்ற எட்டாம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி அரூர்  தர்மபுரி பென்னாகரம் போன்ற பகுதிகளில் நடைபயணம்  மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக தர்மபுரி மாவட்ட பாஜகவினர் படு பயங்கரமாக கொடி கட்டுதல் பேனர் வைத்தல் கட்சியினரின் ஆதரவு திரட்டுதல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


சரி கட்சியினர் கட்சி தலைமையை வரவேற்க மூன்று கூடுவது பேனர் வைப்பது பிரச்சாரம் மேற்கொள்வது நியாயமானது தான் ஆனால் தர்மபுரி பாஜகவில் இரு அணிகளாக மாவட்ட முழுவதும் செயல்பட்டு வருகின்றனர்.

அது என்ன அணி என்றால் பாஜகவின் பட்டியலினங்கள் பெருமளவு மாவட்டம் முழுவதும் களிறு கண்ணன் தலைமையில் பெருமளவினர் மாற்றுக் கட்சியில் பதவி கிடைக்காதவர்கள் எதிர்கால தொலைநோக்கு திட்டத்தோடும் தங்களை தலைவராக மாற்றிக் கொள்வதற்காகவும் சும்மா கெத்தா மத்தவங்க கூட காட்டிக் கொள்வதற்காகவும் பட்டியல் சமூகம் வாழும் பகுதியில் இருந்து சிலர் பாஜகவில் பெருமளவு இணைந்தனர்.


 தற்போது தர்மபுரி மாவட்ட நிலவரப்படி பாஜகவில் பெருமளவு இருப்பவர்கள் பட்டியலின மக்களே கிராமத்திற்கு இரண்டு பேர் மூன்று பேர் என சுமார் மாவட்டம் முழுவதும் 500 முதல் 1000 பேர் வரை பாஜகவில் உள்ளனர் சரி இது ஒரு அணி என்றால் மற்றொரு அணி எது என்றால் மற்ற பாஜகவில் உள்ள அனைவரும் ஒரு அணியாக திரண்டுள்ளனர்.


 தீண்டாமை தர்மபுரி மாவட்ட பாஜகவில் தலை விரித்து ஆடுகிறது அண்ணாமலையை வரவேற்க பட்டியலின மக்கள் பாஜகவில் தனியாக பேனர் வைப்பது மற்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பேனர் வைப்பது என மாவட்ட முழுவதும் பரவலாக ஆங்காங்கே காணப்படுகிறது குறிப்பாக பாஜகவில் இணைந்துள்ள கொங்கு சமூகத்தை சார்ந்த சிலர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களை மெய்ன் பாடி கட்சியின் பேனர்களில் பட்டியல் இன பொறுப்பாளர்களை பேனர்களில் வைக்காமல் திட்டமிட்டு புறக்கணித்து தீண்டாமையை கொடி கட்டி பறக்க விட்டுள்ளனர் தற்போது அரூர் பகுதி பென்னாகரம் போன்ற பகுதிகளில் இரு தரப்பினர் கடைமையை போற்றி போஸ்டல் உருவாகி பேனர் கிளிக்கும் வேலைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.


 இதன் தாக்கம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகின்ற எட்டாம் தேதி வெளிப்படையாக தெரியும் என தெரிகிறது இவற்றை அனைத்தையும் தூபம் போட்டு பாஜகவில் தீண்டாமையை தூக்கிப்பிடிப்பவர் பாஜகவின் மாநில பொறுப்பாளர் கரூர் பகுதியை சார்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் என்பதை வெளிப்படையாக மாவட்ட பட்டியல் இன பாஜகவை சார்ந்த கட்சியினர் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர் கட்சி ஆயிரம் இருந்தாலும் தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களுக்கு எதிரான காட்சிகள் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது..

இந்த காட்சிகளை சமத்துவத்தை நோக்கி அரசியல் செய்யும் அண்ணாமலை அவர்கள் மாற்றினால் தமிழ்நாட்டில் அவர் முதல்வர் பட்டத்தை பெறுவதற்கான இடத்தில் இருப்பார் என்று பாஜக தொண்டர்கள் கூறுகின்றனர் 

Comments