மஞ்சவாடியில் சட்ட விரோதமாக டன் கணக்கில் கிராவல் மண் அள்ளிய பஞ்சாயத்து தலைவர் - ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை தலித் சமூகம் செய்திருந்தால் அதிகார வர்கம் விட்டிருக்குமா..??? களத்தில் இறங்குவாரா டி எஸ் பி
தமிழகத்தில் அதிகப்படியான கனிமவளங்களை கொண்ட மாவட்டமாக தேனி, தருமபுரி , கிருஷ்ணகிரி இருந்து வருகிறது. இப்படி செல்வங்கள் கொண்ட பகுதியைத்தான் வறட்சி மாவட்டம் என்று பட்டம் கொடுத்துள்ளது இந்த சமூகம், அப்படிப்பட்ட பெயர் பெற்ற மாவட்டம்தான் தருமபுரி...
இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான மக்கள் ஒரு ஜான் வயிற்று பிழைப்பிற்காக கூலித்தொழிலாளியாக மற்ற மாவட்டடங்களுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 40 சதவீதம் கொண்ட உயர் சாதி என்று சொல்லும் திருட்டு கூட்டங்கள், அரசியல் அதிகாரம் கொண்ட அரக்கர்கள், அறம் இல்லாத ஒரு சில அரசு ஊழியர்கள் அரசின் விதிமுறைகளை மீறி கருங்கல் செம்மண், கிராவல் மண் அதிகப்படியாக கடத்தப்பட்டு வருகிறார்கள். உழைத்து சம்பாதிக்க துப்பில்லாதவன் கையில் அரசியல் அதிகாரம் கிடைத்தால் நூறு சதவீதம் திருடி பொழைக்கத்தான் செய்வான் என்ற வித்தையை நம்ம தருமபுரி மாவட்டத்தில் பார்க்கலாம் அப்படி பட்ட சம்பவத்தை பத்திதான் இங்கே வண்ட வண்டயா சொல்லப்போறோம்..
அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டியில் இருந்து சேலம் செல்லும் வழியில் இருக்கும் மஞ்சவாடி பகுதியில் அடிக்கடி செம்மண், கருங்கல், விலை உயர்ந்த மரங்கள், கிராவல் மண் என்று பல்லாயிர கணக்கு மதிப்புள்ள கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்துறைக்கும் கனிமவளத்துறைக்கும் தகவல் சென்றிருந்தாலும் அதிகாரிகள் ஓ அப்படியா..? என்ற ஆச்சர்யத்துடன் தகவலை கேட்டுக்கொண்டு எந்த நடடிக்கை எடுப்பதில்லை என கூறப்படுகிறது.காரணம் தீபாவளி, பொங்கல், பண்டிகை நாட்கள், மாதம் ஒருமுறை என சரியான வசூல் வேட்டையாகவே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கடந்த சனிக்கிழமை 30-112-2024 அன்று மாலை மஞ்சவடி பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் தலைமையில் இரண்டு டிப்பர் லாரி கொண்டு சட்ட விரோதமாக கிராவல் மண் அளியுள்ளனர் இது அடிக்கடி பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் தலைமையில் அவ்வபோது நடை பெறுவதாக அப்பகுதியைச்சேர்ந்த அறிவழகன் கூறுகின்றார். அன்றைய நாளில் கிராவல் மண் எடுக்கும் போது அறிவழகன் தனது செல்போனில் படம் பிடிக்கும்பொழுது பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் அருகில் இருந்த ஒருவர் உனக்கென்ன பத்தாயிரம் வேணுமா என்று கேட்கிறார்..
அதற்கு அறிவழகன் மண்ணை கொள்ளையடிச்சி கொண்டு போறாரே அவர் கிட்ட கேளுய்யா என்று சொல்லும்போது தலைவர் சுரேஷ் நவரசன் நாயகன் கார்த்திக் அவர்கள் ஊட்டியில் ஒரு பாடலுக்கு நடந்து செல்வதை போல..ஹேய் நீ வந்த வேலைய மட்டும் பாரு என்ன பத்தி பேசக்கூடாது என்று மிரட்டும் தோனியில் பேசுகிறார். பிறகு அவர் கூட இருந்த ஒரு சில நபர்கள் இப்படி வீடியோ எடுத்து காசு புடிங்கி திங்கிறத விட்டுட்டு ஒழுங்கா ஒழைச்சி சம்பாதிண்ணு சொல்றாரு இந்த வீடியோ பாப்பிரெட்டிப்பட்டி வாட்சாப் குழுவில் பரவ அட இங்க பார்யா சட்ட விரோதமா திருடர திருடன் யோக்கியமா ஒழைச்சி சம்பாதின்னு சொல்றாய்ங்க என்று கலாய்த்து வருகின்றனர்.
திருட்டுத்தனமாக கிராவல் மண் அள்ளியதை வீடியோ எடுத்து வெளியிட்ட அறிவழகனை ஏற்கனவே ஆள் வைத்து அடித்துள்ளதாக அந்த வீடியோ காணொளியில் கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தின் வீடியோ பதிவுகள் முழுமையாக ஆதாரத்துடன் வெளி வந்து கூட காவல் துறையிலும் சரி வருவாய் துறையிலும் சரி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை காரணம் சாதி ரீதியான சமரச பேச்சுக்கள் நடந்து உண்மை சம்பவம் கலைக்கப்பட்டுள்ளது. இதே இந்த இடத்தில் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த நபர் மண் அள்ளும் வேலைகளை செய்திருந்தால் இந்த வருவாய் துறை அதிகாரமும் காவல் துறை அதிகாரமும் இடம் கொடுத்திருக்குமா..? என்று பாப்பிரெட்டிபட்டி பொதுமக்களும் மஞ்சவாடி பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த கேள்விக்கு
கடந்த ஆண்டு திசம்பர் 29-12-2023 அன்று இரவு அ பள்ளிப்பட்டி பாப்பம்பாடியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிய வாகனங்களை கிராம அலுவலர் கதிரவன் துணிவாக செயல்பட்டு டி எஸ் பி க்கு ரகசியமாக தகவல் கொடுத்துள்ளார். இதனால் உடனடியாகரகசியமாக களத்தில் இறங்கி உடனடியாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சாதி பார்க்காமல் குற்றம் செய்தவர்கள் மீது இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்தார் டி எஸ் பி ஜெகநாதன். இந்த அளவிற்கு ரகசியமாக இரவோடு இரவாக அரூரில் இருந்து தனது பணியை அ பள்ளிப்படி காவல்துறையுடன் சேர்ந்து செய்துள்ளார். ஏன் இந்த துணிவு, இந்த நேர்மை பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையிடமோ வருவாய்துறையிடமோ இல்லை ஒரு வேலை அவர்களின் நேர்மையான செயலையும் துணிவையும்,
மலைகளை சுரண்டி திங்கும் கூட்டங்கள் கொடுக்கும் காசு மறைக்கிறதா என்ற கேள்வியை பாப்பிரெட்டிப்பட்டி பகுதிவாழ் மக்கள் வைக்கின்றனர் . இது போன்ற சம்பவங்களை மாவட்ட ஆட்சியர் பார்வை பட்டால் மட்டுமே இதற்கான நடவடிக்கை இருக்கும் இல்லை என்றால் எப்போதும்போல வருவாய் துறை செய்யாமல் காவல் துறை செய்யுமல்ல என்று ஒரு வேலையும் செய்யமாட்டாரகள் ..... இதற்கு காவல் துறை வந்தால்தான் சிறப்பாக இருக்கும் என்கின்றனர் பொதுமக்கள்....
Comments
Post a Comment