Eo கலைராணியிடம் திமுக அரசை வாடகைக்கு விட்ட பாப்பிரெட்டிப்பட்டி திமுக வார்டு உறுப்பினர்கள்..??

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் &துணை தலைவர் &
செயல் அலுவலர்
மோதல் 

போலீஸ் பாதுகாப்பு

 பாப்பிரெட்டிப்பட்டி. நவ, 27 -

 பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர், துணை தலைவர் , செயல் அலுவலர் இடையே மோதல் முற்றியுள்ளதால் பேரூராட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது


 தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவராக இருப்பவர் பட்டியல் இனத்தைச் சார்ந்த செங்கல்மாரி 
திமுகவை சார்ந்தவர் , 


 பேரூராட்சியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பேரூராட்சி செயல் அலுவலர் கலைவாணி, திமுகவைச் சார்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் ரவி ஆகியோர் தலைமையில் ஒரு குழுவாகவும்

 பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி தலைமையில் ஒரு குழுவாகவும் செயல்பட்டு வருகின்றனர்


 இருதரப்பினரும் ஒருவர் தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் ஊழல் குற்றச்சாட்டு கூறியும், பேரூராட்சி வளர்ச்சி பணிகள் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என ஒரு தரபினர் மற்றொடு தரப்பினர் மீது குற்றச்சாட்டுகளை புகாராக மாவட்ட ஆட்சியர் சாந்தி, அமைச்சர் எம் ,ஆர், கே ,பன்னீர் செல்வம், ஆகியோரிடம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மனுக்களாக கொடுத்து வருகின்றனர்



 இதனால் பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்

 இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு செயல் அலுவலர் கலைவாணி மீது பேரூராட்சி கவுன்சிலர்கள் ஊழல் குற்றச்சாட்டை பகிரங்கமாக அறிவித்தும், மாவட்ட ஆட்சியருக்கு மனுவாக அனுப்பி வைத்தனர்


 அதேபோல பேரூராட்சியில் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக பணியில் இருந்து வந்த இரு பெண் ஊழியர்கள் ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தினர்


 இதனால் பேரூராட்சி செயல்கள் செயல் இழந்து முற்றிலும் மந்த நிலையில் சில தினங்களாக நடைபெற்று வந்தது 


இந்த நிலையில் வழக்கம் போல் திங்கட்கிழமை மீண்டும் பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி தரப்பினருக்கும், துணைத் தலைவர் ரவி ,செயல் அலுவலர் கலைவாணி ஆகியோர் தரப்பிற்கும் மோதல்கள் உருவாகும், வாக்குவாதம் ஏற்படும் என்பதால் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்



 அப்போது பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி. திமுக நகர செயலாளரும் கவுன்சிலருமான ஜெயச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் சிலர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்


 அதேபோல செயல் அலுவலர் கலைவாணி அலுவலகத்திற்கு வந்திருந்தார்


 இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பரப்புரப்பு ஏற்பட்டது,


 இந்த நிலையில் தொடர் குற்றச்சாட்டு குறித்து பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்


 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் பேரூராட்சி தலைவராகவும் இருக்கும் நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என இந்த பதவிக்கு வந்துள்ளோம்,
இதை செய்ய விடாமல் தடுப்பதால் பணிகள் மந்தமாகின்றனர், மக்களுக்கு என்று சொல்லி அவர்கள் அவர்களுக்கு செய்து கொள்கிறார்கள், செயல் அலுவலர் முறைகேடுகளில் ஈடுபடுகிறார், அந்த ஊழல் குற்றச்சாட்டுகளை நாங்கள் தட்டி கேட்டால், கோஷ்டி பூசலை உருவாக்குகிறார்
இதற்கு துணைத் தலைவர் ரவி உடந்தையாக இருக்கிறார்



 இது குறித்து கட்சி தலைமைக்கும். மாவட்ட செயலாளர் ஆகியரிடம் முறையிட்டுள்ளோம் ,மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் பேரூராட்சி செயல் அலுவலர் முறைகேட்டில் ஈடுபட்டு ஊழலில் ஈடுபட்டதை புகாராக தெரிவித்துள்ளோம்


 இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்று அவர்கள் என்ன சொல்கிறார்களோ? அதை நாங்கள் கேட்டு நடப்போம்

 நடக்காத வேலைக்கு பில்களை போட்டு செய்ததாக செயலாளர்கள் கணக்கு காட்டுகிறார், கேட்டால் நீங்களும் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சாதாரணமாக சொல்கிறார் ,இது குறித்து மாவட்ட பொறுப்பு அமைச்சர் கவனத்திற்கும் எடுத்துச் சென்றுள்ளோம். போர்டு அனுமதி இல்லாமல் எந்த பணியும் செய்யக்கூடாது என நாங்கள் கேட்டுள்ளோம்


 இது குறித்து மாவட்ட ஆட்சியர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம்
என பேரூராட்சி தலைவர் பகிரங்க குற்றச்சாட்டை செயல் அலுவலர் கலைவாணி மீது தெரிவித்துள்ளார்.

செயல் அலுவலர் கலைராணி அவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டாலும் அங்கே இருக்கும் திமுக வார்டு உறுப்பினர்கள் இது பற்றி எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் பேரூராட்சி தலைவர் செங்கல் மாறி அவர்களுக்கு எதிராகவும் பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி அவர்களுக்கு மறைமுகமான ஆதரவும் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த பத்தாண்டிற்கு முன்பு மிகவும் பின் தங்கிய தமிழகத்தை மீட்டெடுத்து ஒரு சுதந்திரமான அரசை நடத்திக் கொண்டு வரும் திமுக அரசை மோசடி செய்யும் ஈகோ கலைராணி அவர்களுக்கு வாடகைக்கு விட்டது போல் இங்கே இருக்கும் ஒரு சில திமுக வார்டு உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதுவரையில் திமுக உறுப்பினர்கள் போராடும் நிலையை கண்டு திமுக மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது என பேரூராட்சி இருக்கும் சக வார்டு உறுப்பினர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பேரூராட்சி நடந்த மாதாந்திர கூட்டத்தில் ஏதாவது பிரச்சனைகள் நீடித்து விடும் என்பதற்காக
 பேரூராட்சி பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புடன் அலுவலகம் செயல்பட்டது, இச்சம்பவத்தால் பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Comments