குப்பை லாரியில் மோசடி செய்து பொறுக்கி தின்னும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நீதி கேட்டு ஊழலை தட்டி கேட்ட திமுக பெண்ணுக்கு ஆதரவு தந்த அதிமுக எம். எல் .ஏ. கோவிந்தசாமி..!!
குப்பை லாரியில் மோசடி செய்து பொறுக்கி தின்னும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நீதி கேட்டு ஊழலை தட்டி கேட்ட திமுக பெண்ணுக்கு ஆதரவு தந்த அதிமுக எம். எல் .ஏ. கோவிந்தசாமி..!!
தருமபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி, பத்து பேரூராட்சிகள் இயங்கி வருகின்றது. கடந்து ஆண்டு நடைபெற்ற பேரூராட்சி தலைவரின் தேடலுக்கு பிறகு திமுகவை சேர்ந்த பலர் பேர் தலைவராகவும், துணைத்தலைவராகவும் பதவி வகித்து வருகின்றனர். திமுக கட்சியை சேர்ந்த பலர்
இதில் வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றனர்.
வெற்றி பெற்று 2 ஆண்டுகள் முடிவதற்குள் தருமபுரி பேரூராட்சிக்குள் ஏற்ற தாழ்வு மனப்பான்மை, கமிசன் வரவில்லை, (இ.ஓ ) சாதி ஒரு பக்கம் பேரூராட்சி தலைவர் சாதி ஒருபக்கம் என்ற போட்டியால் அலுவலகம் பாதிக்கப்படுகிறதோ இல்லையோ அலுவலகத்தில் பணி புரியும் துணை அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், ஏன் பொதுமக்களும் அதிகளவில் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக பாலக்க
கோடு வட்டதிற்குட்பட்ட மாரண்டஹள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் பணி புரியும் தூய்மை பணியாளர்களை கையால் மலத்தை அல்ல வைத்துள்ளனர்.
( இ.ஓ ) விற்கும் பேரூராட்சி தலைவருக்கும் நல்ல அட்ஸஜ் மென்ட் இருந்ததால் இது குறித்து அங்கே பதவியில் இருக்கும் திமுக கட்சியை சார்ந்த எந்த பொறுப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் பொறுப்பாளர் கருணாகரன் என்பவர் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்தார் இதனடிப்படையில் செய்திகள் வெளிய வரவே அப்போதிருந்த இ ஓ அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இது ஒரு பக்கம் இருக்க பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பொ. மல்லாபுரம் பேரூராட்சி தலைவராக இருக்கும் சாந்தி புஷ்பாராஜ் மீது நிறைய மோசடி புகார்கள் வந்த வண்ணமாகவே இருந்தது, குறிப்பாக சின்னவேடி என்பவர்
மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கடைக்கு ஒரு சாமானிய மனிதர் அனுமதி கேட்டு அலுவலகத்தை நாடியுள்ளார். ஆனால் அங்கே மேல்நிலை நீர்தொட்டி காவலராக பணியாற்றும் வெங்கடாசலம் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கி கொண்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படியெல்லாம் நடக்குமாம் என்று நாம் ஆச்சர்ய படுவதற்குள்
இவங்கெல்லாம் என்ன கலக்சன் பண்றாங்களாம் பெரிய கலக்சன் இதெல்லாம் ஒரு ஊழலா , இதெல்லாம் ஒரு லஞ்சமா அட போங்கையா நீங்களும் உங்க வேலையும் நாங்க பண்றோம் பாரு என்று களத்தில் இறங்கி ஒட்டு மொத்த தருமபுரி மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளுக்கு டப் கொடுத்துள்ளது பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி..!
கடந்த 6 மாதத்திற்கு முன்பு அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணி புரியும் இஓ கலைராணி ராணி அவர்கள் கூடுதலாக பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலக நிர்வாகத்திற்கு பொறுப்பு வகித்தார். பிறகு இ ஓ கலைராணி அவர்கள் அரூர் பேரூராட்சி நிர்வாகத்தில் இருந்து விடைபெற்று முழு நேரமாக பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு பணியில் சேர்ந்தார். அவர் வந்த மூன்று மாதத்திற்கு எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் நன்றாக சென்றுள்ளது.
நாட்கள் செல்ல செல்ல பேரூராட்சி வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும் குடிநீர் வருவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதுகுறித்து அந்தந்த வார்டு உறுப்பினர்களிடம் கேட்கும் போது பணிகள் செய்தால் அதற்கான பில் ரசீதை கொடுக்க மறுக்கிறார். நான் சொல்லும் இடத்தில்தான் நீங்க வேலை செய்யவேண்டும் நீங்க சொல்லும் இடத்தில் வேலை செய்ய முடியாது என்று மிரட்டுவாராம் இ ஓ கலைராணி. இவர் வந்த 6 மாதத்தில் லட்ச கணக்கில் மோசடி நடந்துள்ளதாக பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி கேள்வி எழுப்பியுடன் இ ஓ கலைராணி அவர்கள் திட்டம் போட்டு ஒன்றாக இருந்த 30 வார்டு உறுப்பினர்களை
பிரித்து பேரூராட்சி தலைவர் செங்கல் மாரிக்கு எதிராக போர்க்கொடி தூக்க வைத்துள்ளார்.
இஓ கலைராணி யார் எதற்காக இப்படி செய்கிறார் என்ற குலப்பிதில் இருந்த இதற்கு முன்பு பணியாற்றிய அரூர் பகுதியில் இவரை பற்றி கேட்கும்போது சார் எல்லாமே மோசடி ஆனால் எந்த அதிகாரியும் துணிச்சலாக வந்து ஆய்வு செய்ய மாட்டங்கிறாங்க சார் இவங்க சுமார் 15 டூ 25 லட்சம் மோசடி பண்ணிருக்காங்க அதனாலதான் துணைத்தலைவர் சூரிய தனபால் முறைகேடுகளை தட்டி கேட்டு அவர்களை அங்கிருந்து இடமாற்றம் செய்துள்ளார். ஆனால் இ ஓ கலைராணிக்கு மேல அதிகாரியாக இருக்கும் குருராஜனுக்கு நல்ல கமிசன் போகுது சார் அதனாலதான் இதுவரையில் இவங்க மேல யாரும் நடவடிக்கை எடுக்க மட்டிங்கிறாங்க என்று இ ஓ கலைராணி அவர்களுக்கு கீழ் பணியாற்றும் (ராஜா _ திலம்) ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஓ..! இதுதான் கதையா என்று பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வாட்ச் மேன் போல் ஆதாரத்திற்காக வாசலில் காத்திருந்த போது பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஜெயா என்பவர் அடிக்கடி பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சாமியாபுரம் கூட்ரோடு இடையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவார் ஆனால் பணம் கொடுக்காமல் ரசீது ஒன்றை வாங்கி செல்வார்.
இந்த ஜெயா மேடம்தான் இப்படி என்றால் பெரிய மேடம் இ ஓ கலைராணிக்கு ஓ ஓ என்ற வாழ்க்கை தானாம் அட ஆமாங்க நம்ம ஜெயா மேடம் போடும் அதே பெட்ரோல் பங்கில்தான் இவர்களும் வாரத்தில் மூன்று முறையோ நான்கு முறையோ போட்டு கொள்வார்களாம் அதற்கும் காசு கிடையாது எல்லாத்துக்கும் ரசீதை கொடுத்துட்டு மொத்தமாக பேரூராட்சி குப்பை லாரி கணக்கில் எழுதி மாதம் மாதம் 1 லட்சம் - 1லட்சத்து 17000 ஆயிரம் என லட்சக்கணக்கில் டீசல் பெட்ரோல் செலவிற்கு மட்டும் மக்கள் சேவைக்காக வந்த நிதிகள் கொள்ளயடிக்கபட்டதா என்ற சந்தேகத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கேட்கும் போது ஸ்கூட்டி இரண்டு கார் இந்த வாகனத்திற்கு போடும் பெட்ரோல் டீசல் கணக்கெல்லாம் குப்பை லாரி கணக்கில் வைத்து ஒரே செக்காக எழுதி கொடுப்பார்கள் என்றார் பெட்ரோல் பங்க் ஊழியர் இந்த தகவலை கேட்ட பின்புதான் அரசு மூலம் பேரூராட்சிக்கு பணம் யாவும் கொள்ளை அடிக்கப்பட்டது உறுதியானது. இது குறித்து இ ஓ கலைராணி அவர்களிடம் கருத்து கேட்ட பின்பு பதில் சொல்ல முடியாமல் திணறி நான் எப்படிபட்டவள் என்று அரூரில் உள்ள செய்தியாளரிடம் கேட்டு பாரு தம்பி உனக்கும் என்ன பத்தி தெரியும் செய்தி போட்டாலும் என்னைய ஒன்னும் செய்ய முடியாது என்று தெனாவெட்டாக பதில் கூறி அப்பா என்னுடைய கை காசு போட்டு நான் டீசல் போடுறேண்பா என்று முடித்து விட்டார்.
இதெல்லாம் ஒரு பக்கம் நடக்க
5 மாதமாக எங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் கோகிலா, மெகராஜ், இரண்டு பெண் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் 5 மாத சம்பளத்தை நிறுத்திவைத்து, இவர்களின் வருகை பதிவேட்டை அடித்து திருத்தி இவர்கள் வேலைக்கு வரவே இல்லை என்று பணியாளர்களுடன் சண்டையிட்டு கோகிலா _ மெகராஜ் , அவர்களை அலுவலகத்தை விட்டு வெளியே அனுப்பியுள்ளார் இதனால் இரண்டு பணியாளர்களும் அலுவலக வாசலில் தர்ணாவில் ஈடுபட்டனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பெரும் தூண்டுதலாக ஜெயா என்பவர் இருக்கிறார். எங்களை இப்படி பேசுவதற்கு காரணம் ஜெயா அவர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட கட்டிட அமைப்புகளுக்கு அனுமதி வழங்க பெற்றுள்ளார். அதனை நாங்கள் கண்டு பிடித்து விட்டோம் இதனால் எங்களிடம் ஜெயாவும், இ ஓ கலை ராணி அவர்களும் சமரசம் பேசினார்கள், இதனை பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி அவர்களுக்கு தெரிவித்த பின்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இது போல இருந்தால் தயவு செய்து வேறொரு இடம் மாறிக்கொள்ளுங்கள் என்று வாக்குவாதம் செய்த பின்னர்தான் எங்களுக்கு ஊதியம் வழங்காமல் கொடுமை படுத்தி வருகிறார் என்று பாதிக்கப்பட்ட கோகிலா என்பவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தருமபுரி கூடுதலாக பொறுப்பில் உள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களிடம் தகவல் தெரிவித்தும், முன்னாள் அமைச்சர், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களிடம் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு மாற்றமும் இல்லாததால் நியாயம் கேட்டு செய்தியாளர்களிடம் கூறிய வீடியோ காட்சிகள் பரவியதை அடுத்து
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் கடந்த 5 மாதமாகவே பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் லட்ச கணக்கில் மோசடி நடந்துள்ளது. இது குறித்து பல முறை செய்தித்தாள்களிலும், மீடியாக்களிலும் வந்து கொண்டே இருக்கிறது. இது பற்றி எந்த ஒரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை.
சம்பளம் வரவில்லை, மோசடி நடக்கிறது என்று இங்கே இருக்கும் திமுக மாவட்ட செயலாளரிடமும், அமைச்சரிடமும் கூறியே ஒன்னும் நடக்கவில்லை, அதுவும் பாதிக்கப்பட்ட கோகிலா என்ற பெண் திமுகவில் மாவட்ட தொண்டரணி சமூக வலைதள பொறுப்பில் உள்ளவர் என்பதுதான் பெரிய காமெடி..
சார் திமுக ஆச்சின்னா மோசடி நடக்கதான் செய்யும் இதே அதிமுக கட்சியாக இருந்தா எங்க கட்சியில் இருக்கும் பெண்களை அலுவலக வாசலில் நிற்க வைத்திருக்க மாட்டோம்.
என்னமோ திமுக தான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அவர்களுக்கு பல சலுகைகளை கொடுக்கும் என கூறுகிறார்களே முதலில் தன்னுடைய கட்சியில் இருக்கும் பெண்களுக்கு திமுக அரசால் பயன்பெறுகிறார்களா என்று பார்க்க சொல்லுங்கள், நான் அரசியல் செய்வதற்காக இதை பேசவில்லை திமுக கட்சியில் இருந்தாலும் அவரும் ஒரு பெண் தான் அவரின் நியாயமான போராட்டத்திற்கு இந்த அதிமுக கட்சியின் குரல் ஒலிக்கும் நாங்க ஒன்றும் ஊழல் செய்யும் அதிகாரிகளை வைத்து ஆட்சி நடத்தவில்லை என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடக்கும் மோசடியால் பாதிக்கப்படுவது மக்கள்தான் இது கடும் கண்டனத்திற்குரியது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வலுவான வெற்றியை பெரும் என்பதை இந்த திமுக அரசு பார்க்கும் என்றார்.
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் இப்படி கூறினாலும் திமுக அரசால் கோடிக்கணக்கான பெண்கள் நன்மை பெற்று வருகின்றார் என்பது ஊர் அறிந்த உண்மை. பேரூராட்சி அலுவலகத்தில் நடக்கும் மோசடியால் திமுக அரசு பாப்பிரெட்டிப்பட்டி மக்களிடத்தில் பெரும் அவ நம்பிக்கையை பெற்று வருகிறது. இதனை அரசுக்கு அதற்கு கீழ் இயங்கும் தலைமை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் நடவடிக்கை எடுக்காத போது அமைச்சர்கள் ஆய்வு செய்து நடவடிக்கைக்கான செயலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் மோசடிகள் அதிகாரிகளால் நடக்க எதும் கேட்காமல் இருந்தால் மக்களிடம் வெறுப்பை மட்டுமே சம்பாதிக்க இயலும் என்பதை தமிழக அரசு உணரவேண்டும்.
10 வருடமாக ஆட்சிக்காக போராடிய தலைவனுக்கும் மட்டும்தான் தெரியும் போராட்டத்திற்கான வலி
அப்படிப்பட்ட தலைவனுக்கு பேர் கெடுக்கும் வகையில் இருக்கு அதிகாரியின் மோசடி செயலை அரங்கேற்றிய இந்த இரண்டு பெண்களின் போராட்டத்திற்கு 5 மாதம் சம்பளம் கிடைக்குமா இல்ல காக்கை கூட்டங்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கும் உணவுகளை பொறுக்கி தின்னுவதை போல் மக்களுக்கு கிடைக்கும் நிதியை சூறையாடி, குப்பை வண்டி மூலமாக மோசடி செய்து பொறுக்கி தின்றும் இந்த பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அதிகாரிகள் மீது நடவெடிகை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பார்களா என்று...??
Comments
Post a Comment