சதுரங்க வேட்டை பாணியில் இரட்டிப்பு பணம் வருவதாக ஆசை வார்த்தை கூறி ராணுவ அதிகாரிகளை குறிவைத்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது. ராணுவ அதிகாரிகளின் புகாரின் பேரில் ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.. இந்த வேட்டை தருமபுரி பொம்மிடி பகுதியில் தொடருமா ??


சதுரங்க வேட்டை பாணியில் இரட்டிப்பு பணம் வருவதாக ஆசை வார்த்தை கூறி ராணுவ அதிகாரிகளை குறிவைத்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது. ராணுவ அதிகாரிகளின் புகாரின் பேரில் ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை..



ஈரோடு அருகே உள்ள மேட்டூர் சாலையில் யூனிக் எக்ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. முன்னாள் ராணுவ அதிகாரிகளால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தினர் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும்  இந்நிறுவனத்தில் லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ஒன்பதாயிரம் என வருடத்திற்கு ரூபாய் 80 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து ராணுவ அதிகாரிகளை குறிவைத்து தொழில் துவங்கியுள்ளனர்.. முன்னாள் ராணுவ அதிகாரிகளின் பேச்சை நம்பிய ராணுவ அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டோர் சுமார் 50 கோடி ரூபாய் முதலீடு செய்த நிலையில் ஒரு மாதம் தவணைத் தொகை வழங்கினர். தொடர்ந்து தவணைத் தொகையை வழங்க மறுத்ததோடு நிறுவனத்தின் பங்குதாரர்கள் பலரும் தலைமறைவாகினர். தமிழக முழுவதும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த ராணுவ அதிகாரிகள் பல மாவட்டங்களில் மோசடி புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 10 அன்று ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள்புகார் அளித்திருந்த நிலையில் இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையில் ராணுவ அதிகாரிகளிடம் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து இந்நிறுவனத்தின் பங்குதாரர்களான நவீன் குமார்,பிரபு,முத்துசெல்வம்,பிராங்க்ளின்,நீல மேகம்,திருமால், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.. அதன்படி பலரும் பல்வேறு மாநிலங்களில் தலைமறைவாக உள்ள நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான நவீன் குமார் என்பவர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியில் வசித்து வந்த 37 வயதான நவீன் குமார் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற நிலையில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி30 கோடி ரூபாய் மோசடி ஈடுபட்டுளார். அவரை கையும் களவுமாக கைது செய்த குற்ற பிரிவு போலீசார் கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள முன்னாள் ராணுவ அதிகாரிகளை  ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments