அமலாக்க பிரிவு சோதனையில் சிக்கபோகும் தருமபுரியின் முக்கிய புள்ளி... விளை நிலங்கள் அழிப்பு..! பட்டா போட்ட கரூர் டீம்..எப்படி இவங்களுக்கு மட்டும் ஈசியா அப்ரூவல் கிடைக்குது..?

தருமபுரி மாவட்டத்தில் கரூர் பகுதியில் இருந்து ஒரு அமைப்பு  விவசாய விளை நிலங்களை சட்ட விரோதமாக பிளாட் அமைத்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. 
தமிழகத்தில் முக்கிய அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உறவினர்கள் விளைநிலங்களில் முதலீடு செய்தனர் 
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக அமலாக்க பிரிவு விசாரணை வலையத்தில் சிக்கி அவரது உறவினர்கள் நண்பர்கள் சந்தேகத்துக்குரிய தொழிலதிபர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இன்னமும் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் வைத்து விசாரணை வலையத்தை முடித்து வைக்காமல் தங்களது சந்தேக வலயத்தை நீட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறது.
இந்த வலைக்குள் தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசியல் முக்கிய பள்ளிகளும் கொண்டுவரப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி யார் அந்த திமுக புள்ளிகள் என நமது குழு இறங்கி தருமபுரி மாவட்டத்தில் முழுவதும் வளையம் போட்டு தேடியதில் நமது புலனாய்வுக்கு சட்டென்று தெரிந்தது தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய திமுக புள்ளி முன்னாள் அமைச்சர் அரசியலில் பல்வேறு அவதாரங்களை எடுத்தவர் ஞாபகத்திற்கு வந்தது.

சரி இந்த மத்திய அரசு அமலாக்க பிரிவு வலையத்திற்குள் இவர் இருப்பாரோ என நமது செய்தி குழு ஆய்வு மேற்கொண்டது சில உண்மைகள் வெளிவரத் துவங்கியது

அதன்படி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மோளையானூர் வருவாய் கிராமத்தில் வருவாய் கிராம கணக்கு எண் 47ல் சர்வே 201/4, 201/2, 202/5 B, 208/2A, 201/3A , 207/IA, 209// 2, 201/3, 202 | 5 A, 207/IB /210/3B போன்ற கிராம கணக்கு கொண்ட சொத்துக்கள் இந்த ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி நெடுஞ்சாலையை ஒட்டி கோழி மேக்கனூர் பிரிவு சாலையில் சுமார் 16 ஏக்கர் நிலப்பரப்பு மின்னல் வேகத்தில் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள்,  பாக்கு தோப்பு, ஐந்துக்கு மேற்பட்ட விவசாய கிணறுகள் அடங்கிய நிலப்பகுதி திடீரென அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட்டு  வீட்டு மனை பட்டாவாக மாற்றப்பட்டிருப்பதும் சட்டவிரோத செயல்கள் அரங்கேற தொடங்சியுள்ளது இவ்வளவு சொத்துக்களையும் கொங்கு மண்டலத்தை சார்ந்த சக்திவேல் தலைமையிலான கும்பல் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி குறைந்த விலை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றி வாங்கியுள்ளது என்று உளவுத்துறை விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
தற்போது இந்த நிலம் விற்பனை பரிவர்த்தனையில் நடைபெற்று இருப்பது நமது விசாரணையில் தெரிய வந்தது குறிப்பாக வாணியாறு நீர் தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு வெளியேறும் வலது புற கால்வாய் ஒட்டி செல்லும் நிலப்பகுதி விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக இருந்தும் யாருடைய தைரியத்தில் முறைகேடாக வீட்டு மனை பட்டாவாக மாற்றப்படுகிறது.
யார் இந்த துணிச்சலான செயலில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து நமது ஆய்வுக்குழு விசாரணை மேற்கொண்டதில் அந்த ஆய்வில் கொங்கு மண்டல பகுதியை சார்ந்த சக்திவேல் என்பதும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் அதிகாரத்தை கைக்குள் போட்டுக்கொண்டு செந்தில் பாலாஜி என்பவரது உறவினருடன் கைகோர்த்துக்கொண்டு தற்போது தர்மபுரி மாவட்டத்திலும் இந்த குழுவினர் முகாம் இட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
இந்த குழுவிற்கு தர்மபுரி தற்போதைய திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆதரவு கரம் நீட்டி அந்த பல கோடி ரூபாய் வீட்டு மனை விற்பனையில் ஒரு பங்குதாரராக இவரும் இருப்பார் என்ற சந்தேகம் வலுத்த நிலையில் உள்ளது.

குறிப்பாக நமது ஆய்வுக்குழு இந்த விசாரணை வளையத்தை நீட்டித்துக் கொண்டிருந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பனின் துணையாளர் என்று இருக்கும் வெங்கடசமுத்திரம் நான்கு ரோடு பகுதியை சார்ந்த தமிழ் என்பவர் மூலமாக செய்தியாளர்களை செய்தி  போடவிடாமல் பணம் மற்றும் மிரட்டல் கொடுப்பது,  பேரம் பேசுவது இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என பல்வேறு தொந்தரவுகள் வரத் தொடங்கியதாக கூறப்படுகிறது.


நமது குழுவினர் மேலும் தனது விசாரணையை மேற்கொண்டதில் இந்த நிலம் பத்திரப்பதிவு ஒன்று கட்டுகளாகவும் அரசிற்கு சேர வேண்டிய வருவாய் வரவிடாமல் மோசடியான பத்திரப்பதிவின் மூலம் பல லட்சம் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

 உதாரணமாக முன்பு இருந்த பாப்பிரெட்டிப்பட்டி பத்திரப்பதிவு அலுவலர் இந்திரா இந்த மோசடி வேலைக்கு ஒத்துழைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு தலைமையிலான சக்திவேல் மிரட்டல் விடுத்த போது பட்டியல் இனத்தைச் சார்ந்த பத்திரப்பதிவு அலுவலர் இந்திரா எவ்வளவு போராடியும் அவரை மிரட்டி மோசடி பத்திரப்பதிவு செய்துள்ளனர் எங்கே இந்த பத்திரப்பதிவு அலுவலர் இந்திரா இருந்தால் உண்மையில் வெளிவரத் துவங்கி விடுமோ என்பதால் அவரை திட்டமிட்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்க வைக்க இந்த கும்பல் திட்டமிட்டதும் அதில் அவர் சிக்காமல் அரசியல் அதிகாரத்தாலும் மாவட்ட முன்னாள் அமைச்சர் தூண்டுதலாலும் பட்டியல் இனத்தை சார்ந்த இந்திரா சரியாக பணி செய்யவில்லை என்ற காரணம் கூறி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடம் மாறுதல் நடைபெற்றதும் நடந்த உண்மை சம்பவங்கள்


 அதேபோல வீட்டுமனை பட்டாவிற்கு அரசின் அனுமதி பெறுவதற்கு பெற வேண்டிய டிடிசி அப்ரூவல் பல்வேறு போலியாக ஆவணங்கள்  மூலமாக பெறப்பட்டுள்ளது விவசாய நிலங்கள் வீட்டு மனை பட்டாவாக மாற்றுவதற்கு வருவாய்த் துறையினர் கட்டாயப்படுத்தி போலியான ஆவணங்களை கொடுத்துள்ளதும் தெரிய வருகிறது குறிப்பாக கிராம நிர்வாக அதிகாரி வட்டாட்சியர் போன்றவர்களிடம் இந்த நிலம் விவசாயத்திற்கு உகந்ததல்ல விவசாயம் செய்து பல ஆண்டுகள் ஆகிறது என்பது போல போலியான ஆவணங்களை அதிகாரிகளை மிரட்டி பெற்றுள்ளனர் விலை நிலங்களை தரிசு நிலம் விவசாயத்திற்கு ஏற்ற நிலம் அல்ல என போலியான ஆவணங்களையும் வேளாண்மை துறையில் இடம் இருந்து மிரட்டி பெற்றுள்ளனர்.  அப்போதிய இந்த நில மாற்றம் செய்யும்  பணிகளில் இருந்த அதிகாரிகள், மாவட்டத் வருவாய்த்துறை அதிகாரி,  தாசில்தார், பத்திர பதிவு அதிகாரி, என முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் பேசப்பட்டு வருகின்றது. மற்றும் அரசு பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள் ஆனால் இதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எங்களால் எடுக்க முடியவில்லை என அஞ்சு நடுங்குகின்றனர்.

இதில் நடந்த அத்தனை மோசடிகளையும் நமது குழுவினர் துள்ளி விவரமாக உரிய ஆவணங்களுடன் செய்திகளாக சேகரித்து வெளியேற்றுள்ளது நமது புலனாய்வு இப்படி இருக்கையில் நமக்கு மேலும் கூடுதல் தகவல்கள் வறுத்து வாங்கியுள்ளது இந்த 16 ஏக்கர் நிலம் தமிழக அமைச்சர் தற்போது சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி அவர்களுடைய உறவினர்கள் மூலமாகவே இப்பகுதியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த குழுவினருக்கு சாதி ரீதியாகவும் பங்குதாரராகவும் தர்மபுரி திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் குழுவினர் பெரும் அளவு உதவி செய்ததும் தற்போது அமலாக்க பிரிவு துறையினருக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே எந்த சூழ்நிலையிலும் திடீர் என்று தர்மபுரி மாவட்டத்தில் அமலாக்க பிரிவு விசாரணை வலையத்திற்குள் மாஜி அமைச்சர்களும் மாவட்ட திமுகவினரும் சிக்குவார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடினமான உழைப்பு கொண்டு 10 ஆண்டுகள் கடந்து தமிழக அரசால் மக்களுக்கு விடியல் கொடுத்த இந்த திமுகவிற்கு ஒரு சிலர் செய்யும் சுயநல ஆதிக்கத்தால் நடக்கும் தவ்ருகளால் பெரும் நஸ்டம் உருவாகி வருகிறது என்று தொண்டர்கள் ஒரு பக்கம் தலையில் அடித்து புலம்புகின்றனர்.

Comments