கல்லூரி பேருந்து ஓட்டுநர் செல்போன் நோண்டிகொண்டு வந்ததால் கல்லூரி பேருந்து விபத்து மாணவர்களின் நிலை திக் திக்

கல்லூரி பேருந்து ஓட்டுநர் செல்போன் நோண்டிகொண்டு வந்ததால் கல்லூரி பேருந்து விபத்து மாணவர்களின் நிலை திக் திக் 

பாப்பிரெட்டிப்பட்டி அருகே இன்று காலை
கல்லூரி வாகனம் புளிய மரத்தில் மோதி விபத்து
 10 மாணவர்கள் காயம்

 பாப்பிரெட்டிப்பட்டி. நவ, 22 -

இன்று காலை பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற  பேருந்து விபத்தில் சிக்கியதில் 10 மாணவர்கள் காயம் அடைந்தனர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திற்குட்பட்ட காரப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் யூனிக் கலை அறிவியல் கல்லூரி பேருந்து ஒன்று பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு அரூர் &சேலம் நெடுஞ்சாலையில் அம்மாபாளையம் ஜாலி காடு பிரிவு ரோட்டில் அருகில் சென்று கொண்டிருந்தது


 பேருந்தை ஆலாபுரம் நடூர் பகுதி சார்ந்த ஓட்டுநர் குமார் இயங்கிக் கொண்டிருந்தார்

 அப்போது பேருந்து எதிரே வரும் வாகனத்திற்கு வழி விடு வகையில் ஓரமாகச் சென்றபோது சாலையோரம் இருந்த புளிய மரத்தில் படு பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகிறது. மறுபுறம் மாணவர்களிடம் ரகசியமாக விசாரிக்கும் போது அவர் செல்போனில் ஏதோ பார்த்து வந்தார் அப்போது எதிரே வரும் வாகனத்தை கவனிக்காமல் இருந்ததால் இவர் புளிய மரத்தின் மீது பேருந்தை மோத விட்டார் என்று கூரகின்றனர். 

எது உண்மை எது பொய் என்று கல்லூரி பெருந்திற்குள் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை பர்த்தால் தெரிந்து விடும் 

அப்படி கல்லூரி பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை என்றால் இது குறித்து வாகன தணிக்கை செய்யும் அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 


நடவடிக்கை எடுக்காமல் ஒரு ஓட்டுனருக்காக இறக்கம் காட்டினாள் பாதிக்கப்படுவது என்னவோ மாணவர்களும், பெற்றோர்களும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருக்கைகளிலும் மோதி தலை, கால், உடல் போன்ற பகுதிகளில் பலத்த காயத்துடன் அலறினார், அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த மாணவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர் 


இதில் 10 மாணவர்கள் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்த விபத்து குறித்து ஏ பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

காவல் துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 


கல்லூரி வாகனம் விபத்துக்குள்ளாகி மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Comments