எவிடன்ஸ்பார்வை செய்தி எதிரொலி...! பாப்பிரெட்டிப்பட்டி மாணவியர் விடுதியில் தேசிய எஸ்.சி, எஸ்.டி ,தமிழ்நாடு ஆணைய இயக்குனர் நேரில் ஆய்வு

எவிடன்ஸ்பார்வை செய்தி எதிரொலி...! பாப்பிரெட்டிப்பட்டி மாணவியர் விடுதியில்
 தேசிய எஸ்.சி, எஸ்.டி ,தமிழ்நாடு ஆணைய இயக்குனர் நேரில் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி மாணவியர் விடுதியில்
 தேசிய எஸ்.சி, எஸ்.டி ,தமிழ்நாடு ஆணைய  இயக்குனர் நேரில் ஆய்வு


 மாணவிகளிடம் நேரில் விசாரணை


 தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச், புதுப்பட்டி மாணவிகள் தங்கும் விடுதியில் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 56 பேர் தங்கி படித்து வருகின்றனர்

 அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பள்ளி மாணவிகள் நேற்று திடீரென விடுதி முன்புள்ள நுழைவாயில் பகுதியில் சாலையில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மாணவிகளின் இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது



மாணவிகள் போராட்டத்தின் போது தங்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் வயல்வெளி பகுதி முட்புதர் பகுதிக்கும் செல்வதாகவும், குடிநீர் வசதி, தண்ணீர் வசதி இல்லாததால் வயல்வெளிக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து குளிப்பதாகவும் பகிர் குற்றச்சாட்டை நேற்று வைத்தனர்


 இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இச்சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய எஸ். சி. எஸ். டி. தமிழ்நாடு ஆணைய இயக்குனர் ரவிவர்மன் பள்ளி மாணவியரின் தங்கும் விடுதிக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார்


 அப்போது அவர் மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் எவ்வாறு ஏற்படுத்தப்பட்டுள்ளது, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? கழிப்பிடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? தரமான உணவுகள் வழங்கப்படுகின்றதா? என்பது குறித்து மாணவிகளிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்


 இந்த விசாரணையின் போது ரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, துணை துணை தாசில்தார் மில்லர் மற்றும் காவல் துறையினர் என ஏராளமானோர் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்


 இச்சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Comments