வாக்காளர் பெயர் சேர்த்தல் திருத்தம் சிறப்பு முகாம் பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார் நேரில் ஆய்வு
ஒன்றிய செயலாளர் முத்துகுமார் நேரில் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் நவம்பர் 4,5 சனி மற்றும் ஞாயிற்று கிழைமகளில் வாக்காளர் பட்டியல், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், என்று தேர்தல் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அ.பள்ளிபட்டி, மாரியம்பட்டி, இருளப்பட்டி, சாலூர், வெங்கடசமூத்திரம், போன்ற பகுதிகளில் நடைபெறும் இந்த வாக்குச்சாவடி பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் முகாமில் திமுக சார்பில் (BLA-2) பூத் நிலை முகவர்கள் கலந்து கொண்டனர். பூத் நிலை முகவர்கள் செயல்பாடுகள் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார் நேரில் ஆய்வு செய்து அந்தந்த பகுதிகளில் இருக்கும் 18 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு செய்து 30 மேற்பட்ட பெண்கள், இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தார்.
Comments
Post a Comment