கட்டிலில் தூங்கும் போது தவறி விழுந்து ஒருவர் பலி போலீசார் விசாரணை
பாப்பிரெட்டிப்பட்டி. நவ, 30-
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் தவறி கீழே விழுந்து பலியானார்
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கட்டசத்திரம் கிராமத்தைச் சார்ந்தவர் செல்வராஜ் வயது 52 .இவர் வளையல் வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறார்
இவருக்கு மகேஷ் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர் வழக்கமாக கடந்த 12ம் தேதி இரவு வியாபாரத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பியவர் களைப்பாக இருந்ததால் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்
அப்போது தூக்கத்தில் நிலை தடுமாறி கட்டிலில் இருந்து கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது, உடனடியாக பிள்ளைகளும் மனைவியும் அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி பெற்று வீடு திரும்பியுள்ளனர்
தலையில் காயப்பட்டதால் தொடர்ந்து வலி அதிகமாக இருந்ததால் சேலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்
இந்த நிலையில் நேற்று உடல்நிலை மோசமாகி இறந்து விட்டார், இச்சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா வழக்கு பதிவு செய்து இறப்புக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்
Comments
Post a Comment