நீட் விலக்கு நமது இலக்கு தருமபுரி உதயநிதியாக என்ட்ரி கொடுத்த எழில்மறவன் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த ஒன்றிய செயலாளர்கள்
என்ட்ரி கொடுத்த எழில்மறவன் வரவேற்பு கொடுத்த ஒன்றிய செயலாளர்கள்
திமுக இளைஞரணி மாநில மாநாடு அடுத்த மாதம் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுக கட்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி அக்கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி தொடங்கியுள்ளது. இருசக்கர வாகன பேரணியை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இன்று தொடங்கி வைத்தார்.
8 ஆயிரத்து 647 கிலோமீட்டர்கள் தூரம் மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் இந்த இருசக்கர வாகன பேரணி அடுத்த மாதம் சேலத்தில் நிறைவடைய உள்ளது. இந்த வாகன பேரணி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இன்று சேலத்தில் இருந்து சுமார் 40 இருசக்கர வாகன கொண்ட திமுக இளைஞரணி வீரர்கள் தருமபுரி மாவட்ட சாமியாபுரம் கூட்ரோடு வழியாக வருகை தந்தனர்.
இந்த வருகைய பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார் பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பி. எஸ். சரவணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்த பேரணிக்காக திமுக தலைமையில் அக்கட்சியின் இளைஞர் அணியினர் கன்னியாகுமரியில் இருந்து 4 மண்டலங்களாக பிரிந்து தி.மு.க.இளைஞர் அணியினர் இரு சக்கர வாகன பேரணியாக தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து பொதுமக்களிடம் இருந்து பெற்று வருகின்றனர்
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாய் பகுதியில் நீட்டுக்கு எதிரான பிரச்சார இயக்கத்தினர் 60 பேர் இருசக்கர வாகனங்களில் வந்தனர்
அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி .எஸ். சரவணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாநில வணிகர் சங்க பொறுப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சார்ந்த திமுகவினர் ஏராளமானோர் இரு சக்கர வாகனத்தில் வந்த திமுக இளைஞர் அணியினருக்கு சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்
பின்பு மேற்கு ஒன்றியம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு வந்த திமுக இளைஞரணி இருசக்கர பேரணியினருக்கு பி.எஸ். சரவணன் தலைமையில் பையர் நத்தம் கிராமத்தில் உற்சாகமாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வந்தவர்களுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது
அப்போது பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பையர் நத்தம். பள்ளிப்பட்டி. துறிஞ்சிப்பட்டி, பி.மல்லாபுரம், மெணசி, ஆலாபுரம், பூத நத்தம், கவுண்டம்பட்டி மற்றும் போதக்காடு ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் நீட்டுக்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்பட்ட 2 ஆயிரம் கையெழுத்து பிரதிகளை இளைஞர் அணியினரிடம் ஒன்றிய செயலாளர் சரவணன் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான திமுகவினர் உடன் இருந்தனர்
Comments
Post a Comment