நாற்காலிக்கு சண்டை போடும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிதிமுகவில் ஒரு சங்கி இருப்பதால் மாரி மீது மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டு
திமுகவில் ஒரு சங்கி இருப்பதால் மாரி மீது
மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டு
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பரம்பரை திமுகவினரான மாரி என்பவருக்கு திமுக தலைமை வார்டு கவுன்சிலர் சீட்டு கொடுக்கவில்லை
தேர்தலில் நிற்பதற்கு சீட்டு கொடுக்காததால் சுயேட்சையாக நின்று அதில் வெற்றியும் பெற்று கட்சிக்கு தனது கெத்தை காட்டியவர் தான் மாரி
அது மட்டுமில்லாமல் அதிக பெரும்பான்மை கவுன்சிலர்களுடன் திமுக வெற்றி பெற்று இருந்த போதும்
சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற அண்ணன் மாறி திமுக பேரூராட்சி தலைவர் பதவியையும் வென்று சாதனை படைத்தார்...
அந்த அளவிற்கு வலிமையானவர் அண்ணன் மாரி..
இந்த நிலையில கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைவராக இருந்து வரும் மாரிக்கு எதிர்ப்பாளர்கள், மறைமுகமாக அவரது பதவியை காலி செய்ய சொந்தக் கட்சியினரே தொடர்ந்து சூனியம் வைத்துக் கொண்டு வருகின்றனர்..
மாரி மீது ஊழல் செய்து விட்டார்? அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவையும் கொடுத்துள்ளனர்
தலைவர் மாரி தரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் ஊழல்கள் செய்து வருவதாகவும், திமுக அரசுக்கு எதிராக சதி திட்டங்களை தீட்டி பேரூராட்சியில் மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்த திட்டம் தீட்டி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்...
செயல் அலுவலர் பெரிய அளவில் ஊழல்கள் செய்து அவற்றை மறைப்பதற்கு, உயர்சாதியினருடன் கூட்டு சேர்ந்து தனது பதவியை காலி செய்ய சதி திட்டம் தீட்டி வருவதாகவும் தலைவர் தரப்பு கூறுகின்றனர்
எது எப்படியோ?
நாற்காலி பறி கொடுத்தவர்கள் ஒரு பக்கம்
ஆதிக்க சாதியினர் என்று சொல்லும் அரக்கர்கள் மறு பக்கம் என இரு முனைத் தாக்குதல்களை பேரூராட்சி தலைவர் மாரி சந்தித்து வருகிறார்
திமுக தலைமையோ கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே நிலை நீடித்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறது
தொடர் சம்பவங்கள் தலைவர் மாரிக்கு எதிராக திமுக மாவட்ட தலைமையும் உள்ளதோ என்ற சந்தேகம் பாப்பிரெட்டிப்பட்டி மக்களிடையே தற்போது எழுந்துள்ளது
தலைவர் மாரி சாதித்து தான்
இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்
அதனால இவற்றையெல்லாம் விரட்டி அடித்து சாதிப்பாரா?
பொறுத்திருந்து பார்ப்போம்
Comments
Post a Comment