பொம்மிடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் இருந்ததால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பொம்மிடி அருகே ரயில்  தண்டவாளத்தில் ஆண் சடலம்
போலீசார் விசாரணை

 பாப்பிரெட்டிப்பட்டி. நவ, 6-


 பொம்மிடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் இருந்ததால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


 தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ,பொம்மிடியில் ரயில் நிலையம் உள்ளது


 இந்த வழித்தடத்தில் 100க்கு மேற்பட்ட பயணிகள் ரயில்கள் வந்து செல்கிறது

 இன்று காலை 6 மணி அளவில் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை செல்லும் பகுதியில், விடிவெள்ளி நகர் என்ற இடத்தில் தண்டவாளத்தில் உடல் வேறு, தலைவேறாக துண்டித்த நிலையில் ஒரு ஆண்சடலம் ஒன்று அப்பகுதியில் இருப்பதை பொதுமக்கள் பார்த்தனர்


 இது குறித்து பொம்மிடி ரயில் நிலையத்திற்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்


 அதன்பேரில் போலீசார் விசாரணையில் இறந்தவர் அடையாளம் தெரியாமல் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவர் போல் உள்ளது, உடலை மீட்ட ரயில்வே போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்

 இறந்தவர் யார்? எந்த ஊரை சார்ந்தவர் என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments