பச்ச கலர் நல்லா இருக்கு சிவப்பு கலர் நல்லா இருக்கு..! தூய்மை பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து கலைகட்டிய அரூர் பேரூராட்சி அலுவலகம்

பச்ச கலர் நல்லா இருக்கு சிவப்பு கலர் நல்லா இருக்கு..! தூய்மை பணியாளர்களுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்து கலைகட்டிய அரூர் பேரூராட்சி அலுவலகம்*

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளியை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகங்களில் தனியார் அலுவலகங்களில் பணி புரியும்  பணியாளர்களுக்கு அந்தந்த  அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் அதிர்ச்சியூட்டும் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அரூர் பேரூராட்சி தலைவராக உள்ள இந்தராணி, மற்றும் துணைத்தலைவர் சூரிய தனபால் அவர்கள், பேரூர் கழக செயலாளர் முல்லை ரவி, அவர்கள் அலுவலகத்தில் பணி புரியும் 50 தூய்மை பணியாளர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இனிப்புகள், கார வகைகள், புடவைகள் என தீபாவளி பரிசாக கொடுத்து தூய்மை பணியாளர்களை சற்பரைஸ் செய்துள்ளார் இந்திராணி சூரிய தனபால், முல்லை ரவி
இந்த பேரானந்த மகிழ்ச்சியில் ஆஹா உன்னோட புடவை நல்லா இருக்கு ம்ம் இந்த ரோஸ் கலர் நல்லா இருக்கு சிவப்பு கலர் நல்லா இருக்கென்று தூய்மை பணி செய்யும் பெண்கள் ஆனந்தத்தில் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களுடன் புடவைகளை காண்பித்து, அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், தலைவர்கள் என்று ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து  மகிழ்ச்சியடைந்தனர்.

*தருமபுரி செய்தியாளர் msp மணிபாரதி*

Comments