பாப்பிரெட்டிப்பட்டி BDO OFFICE கப்பு தாங்க முடியில கதறும் பொதுமக்கள்..!! வாயில்லாத ஜீவன் செத்து போச்சி..!!!..யார் கொன்றது..??? பின் தொடரும் விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பு..!!
தாங்க முடியில கதறும்
பொதுமக்கள்..!!
தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் ஒன்றான பாப்பிரெட்டிப்பட்டி பகுதி இந்தப் பகுதியில் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் இயங்கி வருகின்றது.
காவல்துறை நீதித்துறை வட்டாட்சியர் துறை பொதுப்பணித்துறை தீயணைப்பு துறை வருவாய் துறை வட்டார வளர்ச்சித்துறை என பல அலுவலகங்கள் இப்பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு ஏங்கி வரும் ஒரு சில அலுவலகங்களில் சுற்றுப்புறங்களில் தூய்மைகள் இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு செய்தியாளர்கள் செய்தி வெளியிட்ட பின்னர் பல அலுவலகங்களில் தூய்மை செய்யப்பட்டது. குறிப்பாக வட்டாட்சியர் அலுவலகம் பொதுப்பணித்துறை அலுவலகம்
செய்தியாளர்களின் கோரிக்கையையும், பொதுமக்களின் கோரிக்கையும் ஏற்று உடனடியாக தூய்மை செய்யும் பணிகளில் இறங்கிவிட்டனர். ஆனால் அதற்கு எதிர்மறையாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் துர்நாற்றம் வீசும் அளவில் உள்ளது என அப்பகுதியில் வரும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அலுவலகத்தின் உட்பகுதிக்கு செல்லும்போதே உள்ளே இருக்கும் கழிப்பிட அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
அதுமட்டுமின்றி வாசலில் அங்கே ஒரு வேளை சோற்றுக்காக சுற்றி திரிந்த செல்ல பிராணியான நாய் குட்டி ஒன்று அங்கே இருந்த அடையாளம் தெரியாத கார் ஏறியதில் கொல்லப்பட்டிருக்களாம் எனவும் இல்லையென்றால் உள்ளே இருப்பவர்கள் காலால் உதைத்து சாகடிதார்களா ?? என்ற சந்தேகத்தின் அடைபடயில் வந்த தகவலின் பேரில் உடனடியாக அப்பகுதிக்கு சென்று பார்த்தோம், ஆனால் இறந்து கிடந்த நாய் குட்டியை ஒருவர் கூட அதனை அப்புற படுத்தவில்லை, அங்கே சென்ற செய்தியாளர்தான் நாய் குட்டியின் உடலை ஓராமக தூக்கி வைத்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகம் வாசலில் இருசக்கர வாகனங்கள் அதிகமாக இருப்பதால் அங்கே வரும் மக்கள் ஓராமக நிற்பதற்கு கூட வழியில்லை,
அங்கே இருக்கும் வாகன ஓட்டிகளின் அஜாக்கரதியால் ஓர் வாயில்லாதை ஜீவன் இறந்து விட்டது என்று ஒருவர் கூட அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு வாகனங்களை கவனமாக இயக்க அறிவுறுத்தவில்லை. என்பது பெரும் வேதனை...!!! இது குறித்து தகவல் அறிந்த விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை செய்து யார் அந்த தவறை செய்தாலும் நிச்சயம் அவர்கள் நீதி மன்றத்தில் நிற்பார்கள் என்று தகவல் கொடுத்துள்ளனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகம் சுற்றிலும் விசச்செடிகளும், தூய்மை இன்றி கிடக்கும் புள் பூண்டு செடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் அருகில் உள்ள நீதிமன்றத்திற்குள் பாம்புகள், விடபூச்சிகள் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தூய்மை பணியாளர்களை வைத்தோ ஏறி வேலை செய்யும் மக்களை வைத்தோ சுத்தம் செய்யலாம் ஆனால் இதனை சுத்தம் செய்திட கடித்தம் எழுதி அதிற்கு ஒரு நிதி ஒதுக்கி , அதற்கு ஒரு டெண்டர் விட்டு வேலை செய்யா எப்படியும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும் அதற்குள் அலுவலகத்திற்கு வந்து செல்லும், அரசு ஊழியர்கள் பொது மக்கள் பாதுகாப்புடன் நோய் தாக்குதல் இன்றி, இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
இதனை
உணராமல் மக்களின் வாழ்வியல் பகுதிகளில் சுத்தத்தை எதிர்ப்பார்க்கும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முதலில் அலுவலகத்தை சுற்றி உள்ளதையும் அலுவலகத்தில் உள்ள கழிப்பறையை தூய்மை செய்து வைத்தால் அங்கே வரும், அரசு ஊழியர்கள் , உயர் அதிகாரிகள் என்று வந்து செல்லும் பொதுமக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
Comments
Post a Comment