5000 ஆயிரம் கேட்டு அடாவடி செய்த திருநங்கைகள்....அரவானிகளை கண்டு அஞ்சும் தருமபுரி மாவட்ட வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள். காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
அரவானிகளை கண்டு அஞ்சும் தருமபுரி மாவட்ட வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள். காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தருமபுரி மாவட்டம் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மேலும் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வந்த தருமபுரி மாவட்டம் தற்போது வணிக நிர்வனங்கள் அவ்வப்போது புதிய புதிய கடைகளை திறப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் எங்கு கடைகள் திற்தாலும் அங்கு வாடிக்கையாளர்கள் வருகிறார்களோ இல்லையோ உடனடியாக சுமார் 50 க்கும் மேற்பட்ட அரவானிகள் வந்து விடுகின்றனர். மேலும் கொடுப்பதை வாங்கி சென்றால் பரவாயில்லை. நிபந்தனை விதித்து 50 ஆயிரம் முதல் 1 இலட்சம் வரை கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர்.
மேலும் பெரிய நிர்வனங்கள் என்றால் 1 இலட்சம் முதல் 2 இலட்சம் வரை கேட்டு கேட்டு முன்பு நின்று கொண்டு வாடிக்கையாளர்களை உள்ளே செல்லாதவாறு அங்கியே நின்று கொண்டு தகறாறு செய்து வருகின்றனர். மேலும் திருமணம், காதணி விழா உள்ளிட்ட எந்தவித சுபநிகழ்ச்சிகள் நடந்தாலும் கூட்டம் கூட்டமாக வந்து கொடுப்பதை வாங்காமல் அடாவடியாக பேசியும், சாபம் கொடுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகபடுத்தி வருகின்றனர். முதன் முதலாக ஒரு சுபநகழ்ச்சி அல்லது கடைகள் திறப்பு விழா கானும் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் முடிந்த அளவு பேசி கேட்பதை கொடுத்து அனுப்பும் நிகழ்வு நடைபெருகிறது.
அவர்களை முறையாக கவனித்து விட்டு தான் மற்ற செயல்களில் ஈடுபட முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரை தற்போது முன்னேறி வரும் இந்த சூழலில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அரவானிகளின் இது போன்ற செயல்களால் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொடுப்பதை வாங்கி சென்றால் பொது மக்களும் வாழ்த்து சொல்லி அனுப்பி வைப்பார்கள். அடாவடியாக பணம் வசூல் ஈடுபடும் ஒரு சில அரவானிகளால் மாவட்டத்தில் புதிய கடைகள் திறப்பு விழா, சுபநிகழ்ச்சிகள் நடத்தும் போது சாபம் கிடைத்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரவானிகள் மீது மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநங்கை என்று மாற்றிக் கொள்ளவும்....
Comments
Post a Comment